ராஜ்குமாரை கடத்தியது ஏன்? வீரப்பன் விளக்கம்
சென்னை:
கர்நாடகத் தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு கோரியே நடிகர் ராஜ்குமாரைக் கடத்தினோம் என்று வீரப்பன், மாறன், தமிழ் தேச மீட்புப் படைத் தலைவர்அமுதன் ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன், தமிழ்நாடு விடுதலைப்படை தலைவர் மாறன், தமிழ் தேச மீட்புப் படைத்தலைவர் அமுதன் ஆகியோர் வெள்ளிக்கிழமை அறிக்கைவெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில், தமிழக மக்களுக்கு தமிழ்நாடு விடுதலைப்படை மற்றும் தமிழ் தேச மீட்புப்படையின் புரட்சிகர வணக்கங்கள். கன்னட திரைப்பட நடிகர்ராஜ்குமாரை நாங்கள் கடத்திச் சென்ரு விட்டதாக செய்தித்தாள்களில் தினசரி செய்திகளாக வந்ததை அறிந்திருப்பீர்கள்.
மக்களுக்காகவே போராடுகின்றோம் என்று கூச்சலிடும் அமைப்புக்கள் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும்எங்களின் செயல்பாட்டைக் குறைகூறி வருகின்றன. அதனால் ராஜ்குமாரை விடுதலை செய்யும் இத்தருணத்தில் அவரை ஏன் கைது செய்தோம் என்பதைதமிழக மக்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
தமிழ் மக்களின் பண்பாட்டையும், மொழியையும், மண்ணையும் மாற்றான் கொள்ளையிட்டு சீரழித்துக் கொண்டிருப்பதை தெரிந்தும் தமிழகத்தை மாறி மாறிஆட்சி செய்யும் தமிழக அரசுகள் கண்டு கொள்வதேயில்லை.
அதனைத் தடுத்து நிறுத்தும் முகமாக பல்வேறு தமிழ் சார்பு அமைப்புக்கள் ஜனநாயக ரீதியில் நின்று போராடினாலும், அதனால் இவ்வரசு அமைப்புஇரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதோடு, இச்செய்தி மக்களிடத்தில் பரவாமல் இருக்க நெருக்கடியை ஏற்படுத்தி மக்களின் உரிமைக்குரலை நீர்த்துப்போகச் செய்கிறது. இதுதான் காலங்காலமாக தமிழகத்தில் நடந்து வருகிறது.
இந்த நெருக்கடிகளுக்கு பயந்தே தமிழன் தனக்கான மண்ணை ஆந்திர, கேரள, கன்னட வெறியர்களின் அபகரிப்புக்கு விட்டுக் கொடுத்துத்தான் இன்றும்தமிழர்களின் மொழியையும், பண்பாட்டையும் சிதைத்து, தமிழன் என்றொரு இனமே இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்திட தமிழ்ப் பகைவர்கள் மறைமுகமாகசெயல்பட்டு வருகின்றனர்.
இவற்றிலிருந்து மீட்கும் நடவடிக்கையைத் தான் தமிழ்நாடு விடுதலைப்படையும், தமிழ்தேச மீட்புப் படையும் தங்களது போராட்டப் பயணத்தை மேற்கொண்டுஇருக்கிறது.
அனைத்துத் தளங்களில் ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழக மக்கள், தங்களுக்கான தீர்வாக சுய நிர்ணய உரிமையை முன்வைக்கும் போதெல்லாம் பொய்யானஇந்திய தேசியத்தைக் காட்டி போராட்டத்தை மழுங்கடித்து விடுகிறது.
மேலும், அரசால் செய்யக்கூடிய சாதாரண காரியங்களைக்கூட செய்து முடிக்காமல் அலட்சியம் காட்டி வருவது தமிழ் மக்களையே அலட்சியப்படுத்துவதாகக்கருதுகிறோம்.
ராஜ்குமாரை கைது செய்ததின் மூலமாக தமிழர்களின் முழு உரிமையையும் பெற்று விட முடியும் என்ற சிந்தனையோடு அதனைக் கையாளவில்லை. இந்தக்கைதின் மூலமாகத் தமிழர்களின் (அதிரடிப்படையினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் தமிழர்களின்) கோரிக்கைகளையும் முக்கியமாக கர்நாடகத்தமிழர்களின் அவல நிலையையும், அதற்கான உடனடி தேவைகளையும் இரு மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் உணர்த்தவே நடிகரின் கைது நடவடிக்கையைமேற்கொண்டோம்.
இதை ஜனநாயக அமைப்புக்கள் பலமுறை எடுத்துக் கூறியும் அரசுகள் தங்களைச் செவிடர்களாகவே காட்டிக் கொண்டனர். அதனால் இப்படி உளுத்துப்போனஅரசு எந்திரங்களின் செவிட்டுக்காதுகளுக்கு உரத்துக் கூவும், நிகழ்வாக மேற்கொண்ட அதிர்ச்சி வைத்தியம்தான் ராஜ்குமார் கைது நடவடிக்கை.
காவிரி நீர்ப்பிரச்சனை தொடர்பாக 1991-ல் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும் படுகொலை செய்யப்பட்டதற்கும்தமிழ்ப்பெண்கள் நடுத்தெருவில் கற்பழிக்கப்பட்டதற்கும் காரணமானவர்கள் கன்னட வெறியர்கள் என்பதால் அவர்களின் அபிமானத்திற்குரியராஜ்குமாரைக் கைது செய்தோம்.
இதன் மூலமாக கர்நாடக தமிழர்களின் வாழ்வுரிமையையும் அவர்களுக்கான பாதுகாப்பையும் நிரந்தரமாக அளித்திடவும் இதுநாள் வரை கர்நாடகஅரசியலில் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டருப்பதையும் சுட்டிக்காட்டி அவ்வரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்திடவே இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டோம். இதன் மூலம் நாங்கள் எதிர்பார்த்தபடியே இச்செய்திகள் மக்களிடத்தில் பரவலாகச் சென்றுள்ளது.
இதில் எந்தளவிற்கு நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதை விட இந்தளவிற்கு இச்செய்தி மக்களிடத்திலேயே கொண்டு செல்லப்பட்டிருப்பதேஎங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். நாங்கள் எங்கள் தேசத்தின் விடுதலைக்காவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காவும் போராடும்போராளிகளே தவிர கடத்தல் காரர்கள் அல்ல.
எங்கள் தமிழ் தேசத்தை நேசிக்கிறோம். அதே போல் கன்னட மக்களையும், கன்னட தேசத்தையும் மதிக்கிறோம். நம்மிரு தேசங்களும் நம்மிருஇனமக்களும் உரிமையோடும் உடன் பிறப்பு என்கிற உணர்வோடும் ஒத்துழைத்து வாழமுடியும். வாழ வேண்டும்.
ராஜ்குமாரையும், மற்ற பிணைக்கைதிகளையும் மதிப்புடனும், மனிதாபிமானத்துடனும் தான் நடத்தினோம். கடினமான காட்டுச் சூழலில் எங்களால்இயன்றவரை வசதிகள் செய்து கொடுத்தோம். சட்டத்தை மீறிக்காட்டில் மறைந்து வாழும் நாங்கள் எங்கள் கைதிகளை நடத்திய விதத்தையும், சட்டத்தைக்காக்க நாட்டில் உலவும் காவல்துறையினரும், கர்நாடக அரசும் தங்களிடம் சிக்கியவர்களை நடத்திய, நடத்தும் விதத்தையும் ராஜ்குமார் மூலமாகஇந்நாட்டு மக்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளட்டும்.
இந்திய தேசம் என்பது தமிழர்களின் நலனுக்கு எதிரானது என்பதையும் தமிழர்கள் எந்தளவிற்கு அலட்சியப் படுத்தப்படுகிறார்கள் என்பதையும் தடாசிறைவாசிகளின் விடுதலை பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ராஜ்குமார் உள்ளிட்டோரின் மீட்புக்காக மக்கள் உரிமைக்கழக கூட்டமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, கோ.சுகுமாறன்,கொளத்தூர் மணி, நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் மேற்கொண்ட பெரு முயற்சியை மதித்துப் போற்றுகிறோம்.
நெடுமாறனும் மற்றவர்களும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஏனைய ஜனநாயக சக்திகளும் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் வாழும் நல்லெண்ணண்படைத்தோரும், பத்திரிகையாளர்களும், கலைத்துறையினர்களும் எங்களுக்கு விடுத்த வேண்டு கோளை ஏற்று எங்கள் கோரிக்கைகளை கொள்கையளவில்ஏற்றுள்ள இரு மாநில அரசுகள் செயலளவில் அவற்றை நிறைவேற்ற ஆவண செய்யும் என்ற உறுதி மொழியின் அடிப்படையிலும் ராஜ்குமார் உடல்நிலையையும் மனதிற்கொண்டும் ராஜ்குமாரையும், நாகேஷையும் விடுதலை செய்கின்றோம்.
எங்கள் போராட்டம் தொடரும்!
தமிழ்த்தேச விடுதலை வெல்க!
இவ்வாறு, வீரப்பன், மாறன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications