இந்திய ராணுவம் தாக்குதல்: 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மூ:
காஷ்மீரில் 9 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
வெள்ளிக்கிழமை இரவில் ரஜவ்ரி, தோடா மாவட்டங்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டனர். தோடாமாவட்டத்தில் நவபஞ்சி என்ற இடத்தில் தாவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்தராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 தீவிரவாதிகள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தான் முதலில் சுட்டனர். கையெறி குண்டுகளையும் வீசினர். இதையடுத்து ராணுவம் திருப்பித்தாக்கியது. இந்தத் தாக்குதல் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
அதே போல ரஜவ்ரி மாவட்டத்தில் கேரி என்ற இடத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-ஈ-முகம்மத் என்ற அமைப்பைச்சேர்ந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த அமைப்பைத் தொடங்கியவன்மெளலானா அசார் மசூத் என்ற மதவாதி.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணிகளை மீட்கஇந்திய அரசு விடுவித்த தீவிரவாதிகளில் இந்த அசார் மசூதும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம் நடத்திய இரு தாக்குதல்களுக்கும் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் உதவினர். இந்த மக்கள் அனைவரும்காஷ்மீர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தோடா தாக்குதலை ராணுவத்தின் டெல்டா போர்ஸ் என்ற பிரிவு நடத்தியது.ரஜவ்ரி தாக்குதலை சீக்கிய ரெஜிமெண்ட் நடத்தியது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து பெரும் அளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூடு:
ஜம்மூவில் எல்லைப் பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல் நடத்தியது.நவ்ஷெரா, ஆர்.எஸ். புரா, அக்நூர் ஆகிய இடங்களில் எல்லைக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பாகிஸ்தானியப் படைகள் சுட்டனர்.
இதையடுத்து இந்தியப் படையினர் மிகக் கடுமையான பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட சேதம்குறித்த விவரம் தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications