பிற்ப்பட்டோர், சிறுபான்மையினரை குறிவைக்கும் காங்கிரஸ்
டெல்லி:
காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்டோருக்கும், சிறுபான்மை சமூகத்ததை சேர்தவர்களின்முன்னேற்றத்தில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
சோனியா காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டம் டெல்லியில் வெள்ளிக் கிழமைநடைபெற்றது. இந்தக் கூட்டம் 8 மணி நேரம் நடைபெற்றது.
காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் மாநிலங்களான ஆநதிரா, அருணாசல பிரதேசம்,சட்டீசார், டெல்லி, கர்நாடகா, மத்திய பிரதேசம், நாகாலாந்து, பாண்டிச்சேரி,ராஜஸ்தான் மற்றும் மாகாராஷ்டிர மாநில முதல்வர்களும் கட்சி பிரதிநிதிகளும்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பின் தங்கிய மக்கள் முன்னேற்றத்துக்கு எந்த மாதிரியானநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டம் நடந்த பின் நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தி, இது போன்ற கூட்டம் மிகஅவசியானது. இனி அடிக்கடி இது போன்ற கூட்டங்கள் நடைபெறும் என கூறினார்.
இதில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து கூறிய கட்சியின் பொதுச் செயலாளர்குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் விவரித்தார். அவர் கூறுகையில்,
காங்கிரஸ் ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் நூற்றுக்கணக்காண நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. இவை ஒதுக்கப்பட்டு பல புதிய சிறப்பான திட்டங்கள்செயல்படுத்தப்படும்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்தியாவில் அதிகமாக வாழும்சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடுசெய்யப்படும். கேரளாவிலும், கர்நாடகாவிலும் இந்த இட ஒதுக்கீடு உள்ளது எனஅவர் கூறினார்.
அசாம், கேரளா. பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் 2001-ம் ஆண்டுதேர்தல் நடக்கிவிருப்பதால், பின் தங்கிய மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என நிருபர்கள் கேட்ட போது அசாத்அதை மறுத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications