ஆளும்கட்சி உதவியுடன் தயாராகும் போலி வாக்காளர் அட்டை
சென்னை:
சென்னையில் பல இடங்களில் ஆளும் கட்சியான திமுகவினரின் தூண்டுதலால் அதிகாரிகள் போலி அடையாளஅட்டைகள் வழங்கி வருவதாக புகார் கூறப்படுவதையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளது.
அடையாள அட்டைகள் வழங்கும் விஷயத்தில் திமுகவினர் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகஅதிமுக, த.மா.கா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
சமீபத்தில் சென்னையில் வந்த மத்திய தேர்தல் அதிகாரி கில் இது குறித்து கேள்விப்பட்டவுடன் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார். அவரைச் சந்தித்த எதிர்க் கட்சிகள் போலி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவருவதை நிரூபிக்கும் சில ஆதாரங்களையும் வழங்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து வெறுப்படைந்த கில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதற்காக சிறப்புஅதிகாரியையும் அவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு அனுப்ப உள்ளார். இந்த அதிகாரி சென்னையில்விசாரணை நடத்தி தேர்தல் கமிஷனுக்கு விளக்கமளிப்பார்.
ஆளும் கட்சி மீதான புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால், இதன் மீது கில் நடவடிக்கை எடுப்பார்.
தூக்கி எறியப்பட்ட நேர்மை:
இதற்கிடையே ஆளும் கட்சியினருக்கு துணைபோக மறுத்ததால் ஒரு அதிகாரி பழிவாங்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகாட்சியில் துணை தாசில்தாராகப் பணபுரியும் ஜோன் ஆப் ஆர்க் என்ற அந்த அதிகாரி, போலிஅடையாள அட்டைகளை பதிவு செய்ய மறுத்தார். இதையடுத்து அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டது சிங்காரச்சென்னை மாநகராட்சி. இந்த மாநாகராட்சியின் தந்தை (மேயர்), திமுக இளைஞரணித் தலைவரான ஸ்டானின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பணி நீக்கத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். போராடவும் முடிவுசெய்துள்ளனர். இதையடுத்து இவரை உடனடியாக மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வருவாய்த்துறை சிறப்புஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஜோன் ஆப் ஆர்க் நீக்கப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரி கில்லுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை இருந்தால் கள்ள ஓட்டுக்களைத் தடுக்க முடிவும் என்ற எண்ணத்தில் தான் தேர்தல் கமிஷன்அட்டைகள் வழங்க முடிவெடுத்தது.
ஆனால், போலி அடையாள அட்டைகள் தயாரித்து ஜனநாயகத்தையும் நாட்டையும் கேலிக் கூத்தாக்கி வருகின்றனசில கட்சிகள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications