இது ராமனுக்கு ஹனுமனுக்கும் நடக்கும் யுத்தம்!
கோவை:
ராமனுக்கும் ஹனுமானுக்கும் நடக்கும் யுத்தம் போன்றது தான் எனக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள யுத்தம் எனகோவையில் இந்திய தேசிய லீக்கின் பொதுச் செயலர் அப்துல் லத்தீப் கூறினார்.
கோவையில் அப்துல் லத்தீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய தேசிய லீக்கும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்திய முஸ்லீம்லீக்கின் தலைவர் குஞ்ஞாலிக் குட்டி மற்றும் செயலர் அகமதுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
இரண்டு கட்சிகளுக்கும் அடிப்படைக் கொள்கையில் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆனால், இரு கட்சிகளுக்கும்இடையே உள்ளதனி நபர் கருத்து வேறுபாடுதான் பிளவிற்கு காரணமாக இருந்தது. இது தற்போது இல்லை.
இரண்டு கட்சிகளும் இணைந்தால் அகில இந்திய அளவில் தான் இணைவோம். தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தலைமுன்னிட்டு இணைவதாக கருதக் கூடாது.
தமிழகத்தில் தற்போது நாங்கள் அ.தி.மு.க அணியில் உள்ளோம். தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் எங்களுடையநிாேக்கம். நாங்கள் சார்ந்துள்ள அணியில் அதிக இடங்களைக் கேட்க மாட்டோம். எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும். கடந்தமுறை 5 இடங்களில் போட்டியிட்டோம். 5 இடங்களிலும் வெற்றி பெற்றோம்.
பா.ஜ.,வுடன் தி.மு.க கூட்டணி அமைத்ததால் தி.மு.க.,வை எதிர்க்கிறோம். கருணாநிதி எனக்கு 45 ஆண்டு கால நண்பர்.இப்போதும் எங்களுக்குள் எவ்வித வேறுபாடும் கிடையாது. ராமனுக்கும் ஹனுமானுக்கும் இடையே நடக்கும் யுத்தம் போன்றதுதான் எங்களுடைய யுத்தம். ராமனை ஹனுமான் எதிர்த்தாலும், ஹனுமான் ராமனுடைய பக்தன் தான்.
விஷ்வ ஹிந்து பரிஷத், 3000 மசூதிகளை இந்து கோயில்களாக மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது. இதற்கு தி.மு.க என்ன பதில்சொல்கிறது?. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும்போது விருப்பத்தை நிறைவேற்றுவேன் என வாஜ்பாய் பேசியுள்ளார்.
பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், கூட்டணிகளைக் கழற்றி விட்டு விடுவார்களா என்பது தான்கேள்வி. இதற்கு தி.மு.க என்ன பதில் சொல்லப் போகிறது?.
வீரப்பன் வாழும் காட்டுப்பகுதியில் சட்டம் ஒழுங்கை கர்நாடக மற்றும் தமிழ்நாடு அரசுகள் நிறைவேற்ற முடியவில்லை என்றால்ஆட்சியை விட்டு இறங்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதன் பின்னரும் ஆட்சியில் இரு மாநில அரசுகளும் நீடித்துவருகின்றன.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பையடுத்து குடியரத் தலைவராவது உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றார் லத்தீப்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications