ஜனநாயக ரீதியில் வீரப்பன் போராடலாம்
கோவை:
தமிழர் நலனுக்காக போராட வீரப்பன் விரும்பினால், நாட்டிற்குள் வந்து ஜனநாயகரீதியாகப் போராட்டம் நடத்தட்டும் என எம்.ஜி.ஆர் அ.தி.மு.க பொதுச் செயலர்திருநாவுக்கரசு தெரிவித்தார்.
கோவையில் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க பொதுச் செயலர் திருநாவுக்கரசு நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
காட்டிற்குள் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட ராஜ்குமார் 108 நாட்களுக்கு பிறகுவிடுவிக்கப்பட்டுள்ளார். இவரை விடுவிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்ட தமிழ்நாடுமற்றும் கர்நாடக அரசு, தூதுக்குழுவினர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் நிதானமாகச் செயல்பட்டு எவ்வித பாதிப்பும் இழப்பிற்கும் இடம்கொடுக்காமல் இரு மாநில அரசுகளும் செயல்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்கள் வருங்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுஅவசியம். ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டதால் வீரப்பன் நல்லவனாகி விடமுடியாது. உண்மையிலேயே தமிழர்களின் நலனுக்காக வீரப்பன் பாடுபட நினைத்தால்,நாட்டிற்குள் வந்து ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தட்டும்.
எந்த சூழ்நிலையிலும் எந்த விதத்திலும், ஆள் கடத்தல், தீவிரவாதம் போன்றவற்றைஅனுமதிக்க முடியாது.
அதிரடிப்படை மனித உரிமை மீறிய செயல்களில் ஈடுபட்டிருக்குமானால் அதுதிட்டமிட்ட செயலாக இருக்காது. அவ்வாறு மீறப்பட்டிருந்தால் அரசு உடனடியாகநடவடிக்கை மேற்கொள்ளலாம். வீரப்பனை பிடிக்க மீண்டும் அதிரடிப்படையைஅனுப்புவது அந்தந்த நேரங்களில் ஏற்படும் சூழ்நிலையைப் பொறுத்து இருக்கக்கூடாது.
வாக்களர் அடையாள அட்டையில் குளறுபடி உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ்குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் 5 கோடி மக்களுக்கு அடையாள அட்டைவழங்குவது மிகப் பெரிய பணி. இதில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படத்தான்செய்யும். அப்படி ஏற்படும் போது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை நிலவுகிறது. அமைச்சர் பதவிகிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியை விட்டு விலகும் எண்ணம் எனக்குஇல்லை.
பாட்டாளி மக்கள் கட்சியும் இந்தக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும். எதிரணியானஅ.தி.மு.க கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த குழப்பத்தால் தேர்தலுக்குப்பிறகு இக்கூட்டணி தேய்ந்து போகும்.
நான்கே எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிப்பேன் எனஜெயலலிதா கூறிவருகிறார். 40 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் மூப்பனார்ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறு இல்லை.
தமிழகத்தில் முன்றாவது அணி அமைவது மூப்பனாரின் கையில் தான் உள்ளது.அவ்வாறு மூன்றாவது அணி அமைந்தாலும், அது பலமுள்ளதாக இருக்காது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications