கோவையில் தாமரை ரத யாத்திரை முடிந்தது
கோவை:
பாரதிய ஜனதாக் கட்சியின் தாமரை ரத யாத்திரை கோவையைக் கடந்தது.
மக்களிடையே தாமரைச் சின்னத்தை பரப்பும் விதத்திலும், எதிர்வரும் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் பா.ஜ தாமரை ரத யாத்திரையைதொடங்கியது.
இந்த ரத யாத்திரைக்கு மாநிலத் தலைவர் கிருபாநிதி தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்டம் எருமாடு கிராமத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கியரத யாத்திரை , மேட்டுப்பாளையம், வழியாக 17ம் தேதி கோவை வந்தடைந்தது. கோவையில் பொதுக் கூட்டம் நடந்தது.
பின்னர் கோவையிலிருந்து புறப்பட்டு, திருப்பூருக்கு நவம்பர் 18ம் தேதி சென்றடைந்தது. அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சிவகிரி வழியாக ஈரோடுசென்றது. ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் கிருபாநிதி பேசுகிறார்.
இந்த ரத யாத்திரை தர்மபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் பயணம் செய்த பின்னர் திருச்சியில் முடிவடையும். டிசம்பர் 2ம் தேதி திருச்சியில் ஊர்வலம் நடக்கிறது.அன்று இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது.


Click it and Unblock the Notifications
