வீரப்பன் சரணடைய கெடு விதிக்க வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனை விரைவில் சரணடையச் செய்ய கர்நாட, தமிழக அரசுகள் கெடு விதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், கன்னட நடிகர் ராஜ்குமாரை 108 நாட்கள் வனவாசம் வைத்திருந்தார் வீரப்பன். தற்போது ராஜ்குமார்விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரப்பனை விரைவில் சரணடையச் செய்ய கெடு விதிக்க வேண்டும்.

வீரப்பன், சரணடைய மறுத்தால் இருமாநில அரசுகளும் சேர்ந்து கூட்டு அதிரடிப்படை அமைக்க வேண்டும். அவர்கள், காட்டுக்குள் சென்று வீரப்பனைப்பிடிக்க வேண்டும். இதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் மத்திய அரசின் உதவியை நாடலாம்.

இதற்காக, போலீஸாருக்கு நவீன ரக ஆயுதங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பதற்கானஅனைத்து முயற்சிகளையும் இரு மாநில அரசுகளும் செய்ய வேண்டும்.

இனிமேலும், இதுபோன்ற கடத்தல் முயற்சியில் வீரப்பன் ஈடுபடமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் வீரப்பனை சரண்அடையச் செய்ய வேண்டும். அல்லது அவரைப் பிடிப்பதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபட வேண்டும் என்றார் இளங்கோவன்.

முன்னதாக, ராஜ்குமார் விடுதலை குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் நிருபர்களிடம் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+