டெல்லி தொழில்துறை கண்காட்சியில் பங்கேற்கிறது புதுவை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ள, இந்திய சர்வதேச தொழில் துறை கண்காட்சியில் பாண்டிச்சேரி கலந்து கொள்கிறது. பாண்டிச்சேரி பிரிவுமூலமாக மட்டும் ரூ 20 லட்சம் வியாபாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பாண்டிச்சேரி பிரிவு இயக்குனர் ஆஸ்டின் டியாகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஞாயிற்றுக்கிழமை மட்டும்100 வர்த்தக விசாரிப்புகள்வந்துள்ளன. சனிக்கிழமை வரை கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதற்காக ரூ 3 லட்சம் வரை ஆர்டர்கள் வந்துள்ளன.
முன்னதாக, சனிக்கிழமையன்று டெல்லி வந்த பாண்டிச்சேரி முதல்வர் கண்காட்சியில் பாண்டிச்சேரி அமைத்துள்ள கடைகளையும், கண்காட்சியையும் சுற்றிப்பார்த்தார் என்றார் ஆஸ்டின்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications