அதிமுகவை குறை காண்பதே திமுக வின் குறிக்கோள்
திருச்சி:
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்களையே சுட்டிக் காட்டி அவருக்குத் தண்டனை வாங்கித் தருவதையே திமுக குறிக்கோளாகக் கொண்டுள்ளதுஎன்று புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்க ழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத்தொடங்கினார்கள். அதன் தலைவராக முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் செயல்பட்டு வருகிறார்.
அந்தக் கட்சியின் பொருளாளார் ராஜாமுகமது சனிக்கிழமையன்று நிருபர்களிடம் பேசுகையில், எஸ்.டி சோமசுந்தரம் தலைமையில் தமிழகத்தில் மூன்றாவதுஅணி அமைப்பது குறித்து பல கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
ஆனால் இது தமிழகத்தில் மட்டுமே செயல் படும். தேசிய அளவில் செயல்படாது. இந்த மூன்றாவது அணியில் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோநிச்சயம் இடம் பெறாது.
கடந்த 54 மாத ஆட்சியில் தி.மு.க. முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா செய்சத ஊழல்கள் பற்றியே பேசி அதில் அவருக்கு தண்டனை வாங்கித்தரும் முயற்சியில்மட்டுமே ஈடுபட்டு வந்தது. மக்கள் நலத் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என்றார்.
மூன்றாவது அணிக்கு மூப்பானார் தலைமை ஏற்கக்கூடும் என கூறப்படுகிறதே என நிருபர்கள் கேட்ட போது, மூப்பனார் தனது நிலையை உடனேதெளிவு படுத்த வேண்டும் என பதிலளித்தார்.
யு.என்.ஐ.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications