வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்: சுவாமி
சென்னை:
ராஜ்குமார் பிரச்சனை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசாமிகோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியடசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி அதன்மூலம் பணயத் தொகை வசூலிப்பதற்காகவும், விடுதலைப்புலிகளின் ஆதரவு தடா கைதிகளைவிடுவிப்பதற்காகவும் வீரப்பனை கருவியாகக் கொண்டு செயல்பட விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உறுதியான நிலைப்பாடு மூலம் விடுதலைப்புலிகளின் திட்டம் பலிக்கவில்லை.
தேசிய கருத்தொற்றுமை மிக்க ஜனதாக் கட்சியும், தமிழ் மாநில காங்கிரசும் விடுதலைப்புலிகளின் பிளாக்மெயில் தந்திரத்தைப் புறக்கணிக்க மக்களுக்குதைரியம் கொடுத்து வருகின்றன.
எனவே இந்தக் கடத்தல் நாடகம் விடுதலைப் புலிகளுக்ககு மிகப் பெரிய தோல்வியாக முடிந்து விட்டது. இந்திய உள்நாட்டு விவகாரங்களில்விடுதலைப்புலிக் தலையிடுவதை இந்திய மக்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
வெள்ளை அறிக்கை:
ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். மத்திய புலனாய்வுத்துறையினர் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்தஆதரவை வெளியிட வேண்டும்.
ராஜீவ் காந்தியை கொன்ற புலிகளோடு, தொடர்பு வைத்துள்ள வீரமணி, நெடுமாறன் போன்றவர்களுடன் காங்கிரசும் உறுவு வைத்துக் கொண்டதுகண்டிக்கத்தக்கது.
இது ராஜீவ்காந்திக்குச் செய்த மிகப்பெரிய துரோகமாகும். எனவே காங்கிரஸ் கட்சி பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனதுஅறிக்கையில் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications