விமான நிலையத்தில் போலீஸார் "உரசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில், முன்னாள் பிரதமர் குஜ்ராலுக்கு அளித்த பாதுகாப்பின்போது போலீஸாரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்குபதட்டம் நிலவியது.

ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதற்காக செங்கை கிழக்கு மாவட்ட தனிப்பிரிவு போலீஸார் விமான நிலையத்திற்கு வந்தனர்.

இவர்கள் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய முயன்ற பொழுது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த விமான நிலைய பாதுகாப்பு போலீஸார் நீங்கள்வளாகத்திற்குள் செல்ல அனுமதியில்லை எனக் கூறி தடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கும், விமான நிலைய பாதுகாப்பு, போலீஸாருக்கும் விவாதம் ஏற்பட்டது. முடிவில் தனிப்பிரிவுபோலீஸார் வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது குஜ்ராலின் எஸ்.பி.ஜி. வீரர்கள் (சிறப்பு பாதுகாப்புப் பிரிவு வீரர்கள்) அங்கு வந்தனர்.

விமான நிலைய வளாகத்தை முழுவதும் சோதனையிட்ட பின்னர் தான் வி.வி. ஐ.பி.யின் வருகைக்கு கிளியரன்ஸ் தர முடியும் என கூறிவிட்டனர்.

இதனால் வேறு வழியின்றி விமான நிலைய பாதுகாப்புப் போலீஸார் வெளியில் நின்று கொண்டிருந்த தனிப்பிரிவு போலீஸாரை விமான நிலைய வளாகத்தைசோதனை செய்ய அழைத்தனர். உடனே தங்களால் வர முடியாது என அவர்கள் முரண்டு பிடித்தனர்.

முன்னாள் பிரதமர் வருகைக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் இந்தப் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகவல் செங்கை சரக டி.ஐ.ஜி ஜாபர் சேட்க்குதரப்பட்டது. உடனடியாக அவர் தேவையான உத்தரவுகளை பிறப்பித்து நிலைமையை சீர் செய்தார்.

தனிப்பிரிவு போலீஸார் உள்ளே சென்று பாதுகாப்பு வழங்கினர். இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரின் வருகை குழப்பமில்லாமல் நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+