ரூ. 60 லட்சம் மோசடி.. ஒருவர் கைது
சென்னை:
ஆசிரியர் பள்ளியில் இடம் வாங்கித்தருவதாக கூறி மாணவர்களிடம் ரூ 60 லட்சம் மோசடிசெய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமானஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதிஅடிப்படையில் படிக்க சீட் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த சில மாதங்களில் பல மாணவர்கள் இந்த கல்வி நிறுவனங்களை அணுகிபிற்படுத்தப்பட்ட மாணவர் என்கிற தகுதி அடிப்படையில் தங்களுக்கு சீட் வழங்கவேண்டும் என்று கோரினார்கள்.
அப்படி வந்த மாணவர்கள் அதற்கான அனுமதி சான்றிதழையும் கொடுத்தனர். மாணவர்கள்கொடுத்த சான்றிதழை பரிசீலித்து பார்த்த கல்வி நிறுவன நிர்வாகிகள் அவை அனைத்தும்போலி என்று கண்டுபிடித்துள்ளனர்.
உடனே இதுகுறித்து தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவன செயலாளர் மற்றும்பொருளாளர் பாதிரியார் சார்லஸ் புரோமியோவிடம் கூறினார்கள்.
அவர் உடனே, சென்னை மாநகர மத்திய குற்றப்பரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்பொழுது சென்னை அண்ணாசாலையில் காமராஜர் பவுண்டேசன் என்ற பெயரில்நிறுவனம் நடத்தி வந்த அந்தோணி செல்வராஜ் என்ற ஏசையன் என்பவர் தமிழ்நாடுகத்தோலிக்க கல்வி நிறுவன செயலாளர், பாதிரியார் சார்லஸ் புரோமியோ பெயரில் போலிகையெழுத்திட்டு மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் பல்வேறு மாணவர்களிடம் ரூ. 1 லட்சம், 2 லட்சம் என்று வாங்கிக் கொண்டு சுமார்ரூ. 60 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷ்னர் காளிமுத்து உத்தரவின் பேரில் கூடுதல் துணைகமிஷ்னர் முருகவேல் மேற்பார்வையில் போலீஸார் விசாரணை நடத்தி அந்தோணிசெல்வராஜ் என்கிற ஏசையணை கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே இது போல ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி தேனி,வத்தலக்குண்டு, உசிலம்பட்டி பகுதியில் உள்ள வாலிபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டுஏமாற்றினார் என்பதும், இதற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே, அந்தோணி செல்வராஜூடன் இணைந்து இந்த மோசடியில் காமராஜ்பவுண்டேசனின் தலைவராக இருந்த எஸ்.எல்.கிருஷ்ணமூர்த்தி என்பவரும்ஈடுபட்டுள்ளார் என்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
போலீஸார் தேடுகிறார்கள் என்று தெரிந்ததும் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகி விட்டார்.அவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications