திமுக வை தோற்கடிப்போம் .. வி.எச்.பி.
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க, இந்து இயக்கங்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்என்று விஸ்வ ஹிந்து பரிஷத் துணைத் தலைவர் வேதாந்தம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் கிராமக் கோவில் பூஜாரிகளின் 15 நாள் கோவில் வழிபாட்டு முறைகள் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. இதில் கலந்து கொண்ட வேதாந்தம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்து மத பழக்கங்களை கிண்டல் செய்வது தமிழக முதல்வர் கருணாநிதியின் வழக்கமாகி விட்டது. இந்த அரசால்எப்போதும் இல்லாத வகையில் விநாயகர் ஊர்வலம் தடை செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் வில்லுண்டி தீர்த்தத்தில் உள்ள சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவது இந்துக்களுக்கு விடப்படும்எச்சரிக்கை. பெரும்பான்மை இந்துக்களுக்கு சிறுபான்மையினரால் பாதிப்பு உள்ளது என்பதையே இதுகாட்டுகிறது.
தமிழக கோவில்களில் பக்தர்களால் வழங்கப்படும் பணம் வருடத்திற்கு 110 கோடி அளவுக்கு அறநிலையத்துறைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் கோவில்களுக்கு முழுமையான பராமரிப்பு செய்யப்படுவது இல்லை.கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்.
இல்லையென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகி விடும். கருணாநிதி இந்துக்களின் ஓட்டுக்களைபற்றி கவலைப்படவில்லை.
வருகின்ற தேர்தலில் இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மதித்து நடக்கும் அரசியல் கட்சிகளுக்குஓட்டளிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதற்காக நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். பல்வேறு இந்துஇயக்கங்களை ஒன்றிணைத்து மக்களிடையே திமுகவிற்கு எதிராக ஆதரவு திரட்டுவோம் என்றார் வேதாந்தம்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications