காட்டுக்குள் நுழைந்தது அதிரடிப்படை
சேலம்:
தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை வீரர்கள் வீரப்பன் உள்ள சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குள் திங்கள்கிழமை நுழைந்து தேடுதல் வேட்டையைத் துவக்கினர்.
இதுகுறித்து தமிழக அதிரடிடிப்படைத் தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், பண்ணாரி,திம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள காட்டுக்குள் தமிழக, கர்நாடக அதிரடிப்படைவீரர்கள் நுழைந்து தேடுதல் வேட்டையைத் துவக்கினர்.
பல பிரிவுகளாக பிரிந்து சென்று இந்த வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.நானும், கர்நாடக அதிரடிப்படை தலைவர் ஹர்ஷவர்த்தன ராஜுவும் சேர்ந்து 2 மணி நேரம்நடத்திய ஆலோசனைக்குப் பின் தேடுதல் வேட்டையைத் துவக்க முடிவு செய்யப்பட்டதுஎன்றார் பாலச்சந்திரன்.
முன்னதாக, சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில், அதிரடிப்படைநடவடிக்கையின் தேடுதல் வேட்டை துவங்கி விட்டது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications