மைதாவுக்குள் சாராயம்.. வற்றலுக்குள் கஞ்சா
சென்னை:
மைதா மாவு மூடைக்குள் இருந்த 1000 சாராய பாக்கெட்டுகள் மற்றும் மிளகாய் வற்றல் மூட்டைக்குள் இருந்த, 250 கிலோ கஞ்சாவைபோலீஸார் பறிமுதல் செய்து, இதைக் கடத்திய 10 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகள், கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளையும் போலீசார் பறிமுதல்செய்தனர்.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், விற்போர் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானம் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்ககாவல் துறை கூடுதல் இயக்குநர் அலெக்சாண்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஓசூர் - மாலூர் நெடுஞ்சாலையில் மதுவிலக்கு போலீசார், வேகமாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் 12சாக்கு மூட்டைகளில் இருந்த மைதா மாவுக்குள், 1000 பாக்கெட் கர்நாடக சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக லாரி டிரைவர் வெங்கடேசன், பாண்டியன், ராமர் மாடசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் இன்னொரு லாரியை நிறுத்தி சோதனையிடப்பட்டது. அதில் 10 சாக்கு மூட்டைகளில் மிளகாய் வற்றல் இருந்தது. அதற்குள் 250 கிலோகஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் (40), மது (30), செங்கோடன் (46) மற்றும் 20வயது மதிக்கத்தக்க ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications