அதிரடிப்படை நடவடிக்கை துவங்கியது
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை தனது அதிரடித் தாக்குதலை மீண்டும் தொடங்கி விட்டது என்றுதமிழக முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வீரப்பனைக் காட்டுக்குள் சென்று பிடிப்பது குறித்து சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகள்கொண்ட உயர் மட்டக் கூட்டம் திங்கள்கிழமை கூட்டப்பட்டது.
கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை நடந்தது. இதில் முதன்மை செயலாளர் முத்துசுவாமி, உள்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர்,டிஜிபி.ராஜகோபாலன், கூடுதல் டிஜிபி அலெக்சாண்டர், ஐ.ஜி.ராமானுஜம் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐ.ஜி.பாலச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அதிரடிப் படை, கர்நாடக அதிரடிப்படையுடன் ஒருங்கிணைந்து வீரப்பன் மறைந்திருக்கும்சத்யமங்கலம் காட்டுப் பகுதிக்குச் சென்று தனது தாக்குதலைத் மீண்டும் தொடங்கும். அதிரடிப்படைக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்படுவர்.
மீண்டும் தமிழ்ச் செல்வன்: அதிரடிப்படையில் ஏற்கனவே இருந்த டிஐஜி தமிழ்ச்செல்வன், போலீஸ் கண்காணிப்பாளர் அசோக் குமார் தாஸ் மற்றும் எஸ்.பி.பெரியய்யா, சைலேந்திர பாபு ஆகியோர் அதிரடிப்படையில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப் படையில் இடம் பெற்றவர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவைப்பட்டால், வீரப்பனைப் பிடிப்பதற்கு மத்திய அரசின் உதவியையும், இரு மாநில அரசுகளும் நாடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கெனராணுவ வீரர்களின் உதவியை நாடுவது குறித்து, மத்திய அரசுடன் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மலையடிவாரங்களில் கூடுதலாக அதிரடிப்படை முகாம்கள் அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர்கருணாநிதி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications