காதலிக்காக கடலுக்குள் காருடன் சென்று மாண்டவர்
கோலாலம்பூர்:
மலேசியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியின் நம்பிக்கையைப் பெறுவற்காக காருடன், கடலுக்குள் சென்று உயிரை விட்டார்.
மலேசியாவிலுள்ள ஜோஹேர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு பத்திரிகையொன்றில் வந்துள்ளசெய்தி:
ஜோஹோர் மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரைக்கு, 32 வயதான வாலிபர் ஒருவர் தனது காதலியுடன், ஹோண்டா காரில் வந்துள்ளார். அப்போது ஏதோ ஒருவிவகாரத்தில், காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது போலும். தன்னை நம்பாத காதலிக்கு, தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க முடிவு செய்தார்.
ஹோண்டா காருடன், காதலி பக்கதில் இருக்கும்போது, வேகமாக கடலுக்குள் காரை செலுத்தினார். கடலுக்குள் சிறிது தூரம் சென்று விட்ட கார்,நின்று விட்டது. ஆனாலும் அந்த நபர் தனது செயலை நிறுத்தவில்லை. காரிலிருந்து வெளியே வந்து கடலுக்குள் நடந்தார். பின்னர் மூழ்கி விட்டார்.
வாலிபர் கடலில் மூழ்குவதை அவரது காதலியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடலில் மூழ்கியவரின் உடல் சில மணி நேரங்களுக்குப் பின் மீட்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் அதிகாரி அபு பக்கர் இதுகுறித்துக் கூறுகையில், கடலில் மூழ்கி இறந்த வாலிபரின் காதலி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications