டிராவிட் சதம் - வலுவான நிலையில் இந்தியா
டெல்லி:
ராகுல் டிராவிட்டின் அருமையான சதம், முன்னாள் கேப்டன் டெண்டுல்கரின்பொறுமையான ரன் குவிப்பின் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்களைஎடுத்துள்ளது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலானமுதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில்பேட்டிங் செய்தது, ஆண்டி பிளவரின் அருமையான ரன் குவிப்பின் மூலம் 9விக்கெட்டுகளை இழந்து 429 ரன்களைக் குவித்தது.
இந்தியா தனது முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ரமேஷ் விரைவாக அவுட் ஆகிவிட்டாலும் கூட அவருக்குப் பின்னர் ஜோடி சேர்ந்த சிவ் சுந்தர் தாஸ் மற்றும் ராகுல்டிராவிட் ஜோடி அதிரடியாக ஆடியது. தாஸ் 58 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகிச்சென்றார்.
இதன் பின் டிராவிடும், டெண்டுல்கரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து ஜிம்பாப்வேபந்துவீச்சாளர்களை படாதபாடு படுத்தினர். குறிப்பாக டிராவிட் தனது டெக்னிக்கலானஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தனிப்பட்ட முறையில் 90 ரன்களைக் கடந்ததும், டிராவிட் மிகவும் எச்சரிக்கையுடன்ஆட்டத்தைத் தொடர்ந்தார். சிங்கிள் ரன் எடுத்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். 100ரன்களை எடுக்க அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 213. தனது சதத்தில் டிராவிட் 13பவுண்டரிகளையும் விளாசினார்.
இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
ஆட்ட நேர இறுதியில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்து வலுவானநிலையில் இருந்தது. டிராவிட் 118 ரன்களுடனும், டெண்டுல்கர் 70 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
சுருக்கமான ஸ்கோர்:
ஜிம்பாப்வே (முதல் இன்னிங்ஸ்) - 422-9, டிக்ளேர்ட்.
இந்தியா (முதல் இன்னிங்ஸ்) - 275-2 (தாஸ் 58, டிராவிட் 118, டெண்டுல்கர் 70).
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications