4 வருடத்திற்கு பின் மீண்டும் சிறை செல்கிறார் எர்ஷாத்

Subscribe to Oneindia Tamil

டாக்கா (வங்கதேசம்):

வங்க தேச முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், ஜாடியா கட்சித் தலைவருமானலெப்டினன்ட் ஜெனரல் ஹுசைன் முகமது எர்ஷாத் மீண்டும் சிறையில்அடைக்கப்படுகிறார்.

எர்ஷாத் 1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅப்துல் சதாரை ராணுவ புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்து அதிபரானார். 8 ஆண்டுஆட்சிக்குப் பின் 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட மக்கள் புரட்சியில்,பதவியிழந்தார்.

அவர் மீது ஜனதா டவர் கேஸ் என்ற வழக்கு இருந்தது. அவர் மிகப் பெரிய கட்டிடடம்ஒன்று கட்டியுள்ளதாகவும், அது அவரது வருமானத்திற்கு மீறியது எனவும்,வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில்அவருக்கு 7 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

வங்கதேச அரசியலிலேயே அதிக காலம் சிறை தண்டனை பெற்றவர் எர்ஷாத் தான்.இந்த நிலையில், 1997-ம் ஆண்டு ஜனவரிமாதம் 9-ம் தேதி ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார்.

இந்தச் சூழ்நிலையில் மற்றொரு ஊழல் வழக்கில் எர்ஷாத் மீண்டும் சிறைசெல்லவிருக்கிறார். திங்கள் கிழமை தனது ஆதரவாளர்கள் புடை சூழ நீதிமன்றத்திற்குச்சென்று எர்ஷாத் ஆஜராகிறார். அதன் பின் அவர் சிறையில் அடைக்கப்படுவது குறித்துதெரியவரும்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+