வயிற்றுக்குள் ஒரு "இரும்புக் கடை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு அருகே இருக்கும் ஆவாரப்பட்டியைச்சேர்ந்த நீதிராஜன் என்பவர் வயிற்றிலிருந்த பல இரும்புப் பொருட்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

ஆவாரம்பட்டியில் வசித்து வருபவர் விருமாண்டி. இவரது மகன் நீதிராஜன் (22). இவர்ஆந்திராவில் வேலை செய்வதற்காக சில மாதங்கள் முன்பு சென்றார். அங்கு அவர்கொத்தடிமையாக நடத்தப்பட்டுள்ளார்.

தேவையான அளவு உணவு கிடைக்காமல் பசியைத் தீர்க்க கிடைத்த உணவுப்பொருட்களுடன் இரும்புத்துண்டு, கண்ணாடி,பிளேடு போன்றவற்றையும் சாப்பிட்டுவந்திருக்கிறார்.

இந்த பொருட்களை சாப்பிட்டதால் கடும் வயிற்றுவலி வந்து ரத்த வாந்தியும் எடுத்தார்.இதனால் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

தொடர்ந்து வயிற்றுவலி நீடித்ததால் நீதிராஜன் வத்தலகுண்டு மருத்துவமனைக்குசிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் இவரை அரசுமருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுமாறு கூறிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில் நீதிராஜன் வயிற்றில் கம்பிபோன்ற பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்வது என முடிவு செய்தனர்.

அதன்படி வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை நடந்தது. நீதிராஜனின் வயிறுமுதல் ஆசனவாய்வரை குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்தப் பகுதியில்இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டது.

வயிற்றுக்குள் சிறு இரும்பு கம்பிகள், இரும்பு போல்டு, அரை பிளேடு, பேனா கத்திஉட்பட 40 பொருட்கள் இருந்தன. இதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பாஸ்கரன் கூறியதாவது:

தான் வேலை செய்த இடத்திலிருந்து தப்பிப்பதற்காக நீதிராஜன் இந்த பொருட்களைசாப்பிட்டிருக்கிறார். வயிற்றில் துருப்பிடித்த பொருட்கள் இருந்ததால் செப்டிக் ஆகாமல்இருக்க மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறுவை சிகிச்சையை சவாலாக எடுத்து செய்தோம். ஒரு வார காலத்திற்குள்இவர் குணமடைந்துவிடுவார் என அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+