ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: ராமதாஸ்
கோவை:
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம், கொடுத்தாலும் வாங்க மாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோவையில்ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் 200 வது மாநில மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டை யொட்டி பொதுக் குழுக் கூட்டம் நடந்தது.பொதுக்குழுக் கூட்டம் முடிந்தவுடன், பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், இந்த அணைப் பகுதியைப் பார்வையிட வரவிருக்கும் மத்திய அரசுக்குழுவினருக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட தமிழக பொதுப் பணி ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து சென்னையில் வரும் டிசம்பர் மாதம்போராட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதனை நாங்கள்பொருட்படுத்தவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பலர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மாநிலத் தலைவர் மணிமுதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். முதல்வரும் கவனிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
பாட்டளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வருகிறது. நீடிக்கும். பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை நிலையாக இல்லை.
சில மாதங்களில் ஏறுகிறது. சில மாதங்களில் இறங்குகிறது. மம்தா பானர்ஜி இப்பிரச்னையை பெரிதுபடுத்தியிருக்க வேண்டியதில்லை. இது கூட்டணிக் கூட்டுக்குழுக் கூட்டத்திலேயே பேசி முடித்திருக்கலாம். வாழப்பாடி ராமர்த்தி அமைச்சராக இருந்தபோது ஒரு ரூபாய் குறைக்கப்பட்டது.
வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு என்ற சர்ச்சை இப்போது இல்லை, வீரப்பனே பொதுமன்னிப்பு கேட்கவில்லை. இந்த பிரச்னையில் யாருக்கும் நஷ்டம்இல்லை. ஒரு வாரப் பத்திரிக்கையைத் தவிர. அந்த பத்திரிக்கையால் கூட பின்னடைவு ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.
இது போன்ற கடத்தல் நாடகங்கள் வருங்காலதில் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
அரசு வங்கிகளைத் தனியார் மயாமக்கக் கூடாது. இதனை சீரமைத்து தற்போதுள்ள நிலையே நீடிக்கச் செய்ய வேண்டும். அரசியல் குறித்து பிப்ரவரியில்நடக்கும் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். கொடுத்தாலும் வாங்கமாட்டோம் என்றார்.
பேட்டியின்போது மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் சண்முகம், எம்.பி, இளங்கோவன், மாநிலத் தலைவர் ஜி.கே மணி ஆகியோர் உடனிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications