மக்களின் கேள்விக் கனைகள்.. மெளனத்தில் எம்.எல்.ஏ.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில், தொகுதிக்கே வராத ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ராஜாராமனைமுற்றுகையிட்டு அவரது தொகுதி மக்கள் கெரோ செய்தனர்.
ராஜாராமன் எம்பலம் என்ற தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சமீபத்தில் இந்தப்பகுதியில பல குடிசைகள் தீயில் கருகின. பல வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்டன.ஆனால் இரு சம்பவத்திலும் பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூற ராஜாராமன்வரவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை எம்பலம் பகுதிக்கு ராஜாராமன் வந்தார். ஆனால்அவரை தொகுதிக்குள் நுழைய மக்கள் அனுமதிக்கவில்லை. வன்முறை நடந்தபோதும்,குடிசைகள் எரிந்தபோதும் ஏன் வரவில்லை என்று மக்கள் கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டனர்.
150-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு ராஜாராமனிடம்பதில் இல்லை. அமைதியை மட்டுமே பதிலாக வழங்கி நின்றார்.
பின்னர் எம்பலம் தொகுதி கட்சி நிர்வாகிகள் தலையிட்டு பொதுமக்களைச்சமாதானப்படுத்தினர். அதன் பிறகு பாதுகாப்புடன் எம்.எல்.ஏ. அங்கிருந்து அழைத்துச்செல்லப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications