சத்துணவு சாப்பிட்ட குழந்தை சாவு
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டி பாளையத்தில் உள்ள பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும் எட்டுகுழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள சரஸ்வதி நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் கடந்த 17-ம் தேதி சத்துணவு வழங்கப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் 280மாணவ மாணவிகள் சத்துணவை சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென்று சில குழந்தைகள் வாந்தி எடுத்தனர். பின்னர் மயங்கி விழுந்தனர். இதனால் பள்ளியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக,மாணவ மாணவிகளை புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இவர்களில் 9 மாணவ மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நல்லூர் குச்சிப்பாளையம் அல்லி முத்து என்பவரதுமகள் ஜெயகாந்தி (வயது 6), பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அல்லிமுத்து வளவனூர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீஸார் சத்துணவு மைய பொறுப்பாளர் பூபாலன், உதவியாளர்கள் ராணி, மற்றொரு ராணி ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் மதிய சத்துணவில் விஷத்தன்மை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications