வீரப்பனைப் பிடிக்க கர்நாடக அரசு தீவிரம்
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிப்பதற்காக அதிரடித் தாக்குதல் நடத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன், முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திங்கள்கிழமை ஆலோசனைநடத்துகிறார்.
போலீஸார் உள்பட 120 பேர்களைக் கொன்றதாகவும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடியதாகவும்,தேடப்பட்டு வரும் சந்தனக் கடத்தல் வீரப்பன், கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றார்.
108 நாட்களுக்குப்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறுதரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இஸ்ரேல் நாட்டில் பயிற்சி பெற்ற அதிரடிப்படையை வரவழைத்து வீரப்பன் கும்பலை வேட்டையாட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாகூறியுள்ளார்.
இதற்கிடையே, வீரப்பன் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்று தமிழர்தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் வீரப்பனைத் தேடும் வேட்டையை தீவிரப்படுத்தவும், அவர் மீது பெரிய தாக்குதல் நடத்தவும், கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகத்தெரிகிறது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன், முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறார். விதானசவுதாவிலுள்ள கமிட்டி அறையில்திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சட்டசபையில் செவ்வாய்க்கிழமைஅறிவிக்கப்படும். அப்போது வீரப்பனைப் பிடிக்க எவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் என்பது தெரியும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications