கடும் மழை: சென்னையில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால் ரயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் பெங்களூர்-மைசூர் ரயில்கள்சென்னையிலிருந்து மிகவும் தாமதமாகக் கிளம்பிச் சென்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக சென்னை அருகே 3 இடங்களில்தண்டவாளங்களுக்கு கீழே மண் அடித்துச் செல்லப்பட்டு அரிப்பு ஏற்பட்டது.
சென்னைக்கும், அத்திப்பட்டுக்கும் இடையே தண்டவாளத்தில் விரிசலும் ஏற்பட்டது. இதனைத் தண்டவாளத்தை சோதனை செய்யும் கேங்க்மேன் பார்த்து உயர்அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர்.
இதனால் கோராக்பூரிலிருந்து, கொச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அத்திப்பட்டில் நிறுத்தப்பட்டு, 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
திருவாலங்காட்டுக்கும், காட்பாடிக்கும் இடையே தண்டவாளத்தில் இன்னொரு விரிசல் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த விரிசலால் சென்னைக்குவரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன.
ஏற்காடு எக்ஸ்பிரஸ், மைசூரிலிருந்து செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கடம்பத்தூரிலும், பெங்களூரிலிருந்து சென்னை வரும் ரயில்அரக்கோணத்திலும் நிறுத்தப்பட்டன.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யப்பட்டு, இந்த ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை போய்ச் சேர்ந்தன.
சரியான நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை செல்லும் ரயில்கள் பெரிய விபத்தில் சிக்காமல் தப்பின.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications