பெற்ற மகளையே கற்பழித்த கொடூர தந்தை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

பெற்ற மகளை தந்தையே கற்பழித்த கொடூரமான சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.இந்த மிருகச் செயலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் கரியபெருமாள் மலை அடிவாரம் கே.பி. கரடை என்ற ஊரைச் சேர்ந்தவர்பழனிச்சாமி, (35). இவர் பால் ஊற்றும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மலர்(30). இந்த தம்பதியருக்கு பிரகாஷ் (7) என்ற மகனும், உஷா (14) என்ற மகளும்இருக்கின்றனர். உஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கால்ஊனமடைந்தவர்.

பழனிச்சாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்குவந்து தகராறு செய்து வந்தார். சென்ற ஞாயிற்றுக் கிழமை எப்போதும் போல்குடித்துவிட்டு வந்த பழனிச்சாமி சண்டை போட்டுவிட்டு மதிய வேளையில் படுத்துதூங்கிக் கொண்டிருந்தார்.

உஷா விடுமுறை நாளாதனதால் வீட்டில் இருந்தார்.தந்தை அருகில் மதியம் உஷாதூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வீட்டில் எவருமே இல்லை.

தூங்கிக் கொண்டிருந்த பழனிச்சாமி விழித்தெழுந்தார். அருகில் உறங்கிக்கொண்டிருந்த தன் மகளின் வாயை கைகளால் பொத்தி அந்த சின்னஞ்சிறு மலரைசின்னா பின்னப்படுத்தினார். தன் மகளை தானே கற்பழித்தார். இது பற்றி வெளியில்சொல்லக் கூடாது எனவும் எச்சரித்தார்,

சிறிது நேரம் கழித்து அழது கொண்டே வெளியில் வந்த உஷா தன் தாயிடமும்,அருகிலிருந்தவர்களிடமும் தனக்கு நேர்ந்த நிலைமையை சொன்னார். இதைக் கேட்டுகட்டுக்கடங்காத கோபமடைந்த அவர்கள் பழனிச்சாமியை தேடினர். அவர் கதவைஉள்பக்கம் தாழிட்டுக் கொண்டு கூரையைப் பிரித்து தப்பி ஓடி விட்டார்.

கள்ளங்குறிச்சியில் தலைமறைவாக இருந்த அவரை திங்கள் கிழமையன்று ஊர்மக்கள் பிடித்து செம்மையாக அடித்து உதைத்து சிறை வைத்தனர். பஞ்சாயத்துமூலம் இந்த விஷயத்தை தீர்த்துக் கொள்ளலாம் என நினைத்தனர். ஆனால் விஷயம்போலீசாருக்கு சென்று விட்டது. போலீசார் வந்து பழனிச்சாமியை பொதுமக்களிடமிருத்து மீட்டு கைது செய்து சென்றனர்.

உஷா சிறு குழந்தையாக இருக்கும் போது குடிவெறியில் பழனிச்சாமியால் தூக்கிஎறியப்பட்டு கால் ஊனமானவர் என்பது குற்பிடத்தக்கது. தனக்கு நேர்ந்தகொடுமையால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத உஷா நான் சாக வேண்டும்.இல்லை என் தந்தை சாக வேண்டும் என்று மட்டுமே சொல்லி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+