கமாண்டோ வீரர்களையும் அனுப்ப கர்நாடகம் முடிவு
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் கமாண்டோ வீரர்களை அனுப்ப வேண்டும் என்று பெங்களூரில் நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் திங்கள்கிழமை முடிவு செய்யப்பட்டது.
வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை கடத்திய பின்னர் இதுவரை கர்நாடகாவில் 6 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இப்போது நடிகர் ராஜ்குமார்மீட்கப்பட்ட பின்னர் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த 7 வது முறையாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கர்நாடக அரசு அழைப்புவிடுத்தது.
கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டம் திங்கள்கிழமை இரவு 7.05 மணிக்கு முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர்கள் கார்கே, சந்திரேகவுடா, தரம்சிங், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் தலைவர் கவுஜலகி, அதிமுகசார்பில் எம்.எல்.ஏ. பக்தவச்சலம், தலைமைச் செயலாளர் பட்டாச்சார்யா, உள்துறை செயலாளர் பிரகாஷ், போலீஸ் டிஜிபி.தினகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க என்ன விதமான முயற்சிகள் மேற்கொள்வது என அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, மத்தியஅரசின் கமாண்டோ படை உதவியுடன் கர்நாடக-தமிழக அரசுகள் இணைந்து வீரப்பனை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டசபையில்அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
வீரப்பனைப் பிடிப்பதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அத்வானி கூறியிருக்கிறார். எனவே மத்தியஅரசிடம் கமாண்டோ உதவியை மாநில அரசுகள் கேட்குமா என்று நிருபர்கள் போது, அது குறித்து பதிலேதும் கூற மறுத்து விட்டார் கிருஷ்ணா.
மேல்-சபை எதிர்கட்சித் தலைவர் கே.எச்.சீனிவாசும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications