புரூஸ் லீயின் 60-வது பிறந்த நாள்: ஹாங்காங்கில் குவியும் ரசிகர்கள்
ஹாங்காங்க்:
மறைந்த குங்க்பூ வீரர் புரூஸ் லீ யின் 60 வது பிறந்த நாளை, அவரது ரசிகர்கள் ஹாங்காங்கில் ஒரு மாதத்திற்கு விமரிசையாகக் கொண்டாடவுள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற குங்க்பூ வீரர் புரூஸ் லீ. இவர் பல திரைப்படங்களில் நடித்து தனது கராத்தே வித்தைகள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர்.1973 ம் ஆண்டு கவ்லான் நகரில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருக்கும் போது மர்மமான முறையில் இறந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது இன்றுவரை புரியாத புதிராக உள்ளது. புரூஸ்லீயின் மனைவி பெயர் லிண்டா. சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார்.
நவம்பர் 27 ம் தேதி புரூஸ் லீ யின் 60-வது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள், ஹாங்காங் நகரில் ஒரு மாதத்திற்கு விழாகொண்டாடுகின்றனர். விழாவில் புரூஸ் லீயின் பல படங்கள் திரையிடப்படுகின்றன.
திங்கள்கிழமை இந்த திரை விழா தொடங்கியது. தொடக்க விழாவில் புரூஸ் லீ 10 வயதாக இருக்கும் போது நடித்த திரைப்படமான "தி கிட்திரையிடப்பட்டது. அவரது 60 பிறந்த தினமான நவம்பர் 27 ம் தேதி " புரூஸ் லீ: தி வாரியர் ஜர்னி என்ற டாகுமென்டரி படம் காண்பிக்கப்படவுள்ளது.
டிசம்பர் 17 ம் தேதி வரை இந்தத் திரைப்பட விழா நடக்கும். விழாவில் புரூஸ் லீ யின் கராத்தே விருந்துகளை உள்ளடக்கிய தி டிராகன், ஃபிஸ்ட் ஆப் ஃபரிமற்றும் தி பிக் பாஸ் ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன.
ஹாங்காங் நகர பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார அமைப்பு இயக்குநர் லியோங் கூறுகையில், புரூஸ் லீ யின் பிறந்த நாளையொட்டி அமெரிக்கா, ஐப்பான்,ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் ஹாங்காங் வந்துள்ளனர்.
இது வெறும் திரைப்பட விழா மட்டுமல்ல. புரூஸ் லீ யின் திரைப்படங்கள் குறித்து ஆராய்ச்சி நடத்துபவர்களுக்கும் நல்ல வரப்பிரசாதமாகும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications