வி.எச்.பியை எதிர்த்து த.மு.மு.க. போராட்டம்
கோவை:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்ற விஷ்வ இந்து பரிஷத்தின்அறிவிப்பை எதிர்த்து தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் டிசம்பர் 6-ம் தேதிஅனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹருல்லாநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் எனதொடர்ந்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கூறி வருகின்றனர். இது முஸ்லிம்மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
மத்திய அரசு இங்கு ஒரு போதும் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கக் கூடாது. பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்தை மீண்டும் அரசு திருப்பித் தர வேண்டும். அங்கு மீண்டும்மசூதி கட்ட வேண்டும். மேலும் ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் பரிஷத்அமைப்பினர் கரசேவை என்ற பெயரில் கோயில் கட்டும் பணியை தொடர விடாமல்தடை விதிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் அயோத்தி பிரச்னை குறித்து எந்த தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்கத்தயாராக உள்ளோம். பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக சி.பி.ஐ வழக்கில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதிஆகியோர் பதவி விலக வேண்டும்.
இதனை வலியுறுத்தியும், பரிஷத்தின் கோயில் கட்டும் அறிவிப்பை எதிர்த்தும் மாவட்டதலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.ஆனால், இதற்கு அரசு அனுமதி மறுத்து வருகிறது. அமைதியான முறையில் நடத்தப்படும் இத்தகைய போராட்டங்களை அரசு அனுமதிக்காதபோதுதான் தீவிரவாதம்உருவாகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications