இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இங்கிலாந்து யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கையில் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கலாம் என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் பீட்டர் ஹெய்ன் சென்னையில் புதன்கிழமைதெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 17 வருடங்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. தனி ஈழம்பெற்றே தீருவோம் என்று புலிகள் தங்களது பிடிவாதத்தில் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் இனப் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்கும் சமரச முயற்சியில் நார்வே நாடு இறங்கியுள்ளது. நார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக்சோல்ஹெம், புலிகள் தலைவர் பிரபாகரனையும், அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் நார்வே முயற்சிக்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர்ஹெய்ன் பேசியதாவது:

நார்வேயின் சமரச முயற்சியை இங்கிலாந்து வரவேற்கிறது. இதுகுறித்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமருடன், பேச்சுநடத்தினேன்.

இதுதவிர, தமிழர்கள் அதிகமாக வாழும் வடகிழக்குப் பகுதிக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கலாம். இந்தப் பிரச்சினையில் இங்கிலாந்து எந்த முடிவுஎடுப்பதாக இருந்தாலும், அதற்கு முன் இந்தியாவுடன், ஆலோசனை நடத்தும் என்றார் பீட்டர் ஹெய்ன்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு புதன்கிழமை பிற்பகல் சென்றார் ஹெய்ன். அங்கு அதிபர் சந்திரிகா உள்ளிட்டதலைவர்களை அவர் சந்திக்கிறார்.

கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இங்கிலாந்து உதவும். இலங்கை பயணத்தின்போது விடுதலைப் புலிகள்இயக்கத் தலைவர்களை நான் சந்திக்க மாட்டேன். இருப்பினும், அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+