கனவு காணுங்கள் .. அப்துல் கலாம்
ராமநாதபுரம்:
மாணவர்கள் கனவு காண வேண்டும்,அவை பலிக்கும். அப்படிப் பலிக்கும்போது அவற்றை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்விஞ்ஞானி அப்துல் கலாம்.
அப்துல் கலாமுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள வருவதற்கு முன்புஅவர் ராமநாதபுரம் சென்றிருந்தார். அங்கு தான் படித்த சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளிக்குச் சென்று பள்ளியை பார்வையிட்டார்.
பின்னர் பள்ளி மாணவர்களிடையே கலாம் பேசுகையில், இந்தியாவின் அறிவியல் கருவூலம் சாராபாய். அவரின் தொலை நோக்குதான் இந்தியாவில் இன்றுஎண்ணற்ற விஞ்ஞானிகளை உருவாக்கியுள்ளது.
1966 ம் ஆண்டில் நான் இந்தப் பள்ளியில் படித்தேன். அப்போது, எனது தமிழாசிரியர் சொல்லிக் கொடுத்த ஒரு குறள்தான் எனது வாழ்க்கைக்குஅடிப்படையாக அமைந்தது. எனக்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம் என் உள்ளத்தில் உரம் ஏற்றிய குறள் அது.
இன்று நம் நாடு பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இதற்கு நாம் எண்ணிய எண்ணங்கள் தான் காரணம். எண்ணத்தில் உறுதி, செயலில் திறன் இருந்தால்வெற்றி நிச்சயம்.
திருக்குறள் என் வாழ்வோடு இணைந்த ஒன்றாகும். திருக்குறள்தான் என் மனதில் லட்சியப் பொறிகளை உருவாக்கியது.
நான் படித்துக் கொண்டிருந்த போது விஞ்ஞானி விக்ரம் சாராபாயுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்புதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது.விக்ரம் சாராபாயின் எண்ணங்கள் தான் இந்தியாவை உயர்த்தியது. அவர் பெற்ற வெற்றிதான் இந்தியாவின் வெற்றி.
மாணவர்களே, நெஞ்சிலே துணிவிருந்தால் நிலவிலும் கால் வைக்கலாம். கனவுகள் காணுங்கள். அந்தக் கனவுகள் நிச்சயம் பலிக்கும். அந்த எண்ணங்கள்செயல்களாக மாறி, வெற்றி பெறச் செய்யும் என்றார் அப்துல் கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications