இந்தி நடிகரைப் பாதுகாக்க முன்வருகிறது மே. வங்கம்
கல்கத்தா:
இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை, வீரப்பன் கடத்திச் செல்லாத வகையில், அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றுமேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா புதன்கிழமை அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஊட்டியில் ஹோட்டல் நடத்தி வருவதால் ஊட்டியிலேயே தங்கியிருக்கிறார். படப்பிடிப்புநடக்கும்போது, ஊட்டியிலிருந்து டெல்லிக்கும், மும்பைக்கும் சென்று வருகிறார்.
முதுமலை மற்றும் அருகிலுள்ள பந்திப்பூர் காட்டில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதால், மிதுன் சக்ரவர்த்தியை வீரப்பன் கடத்தலாம் என்று ஒரு கருத்துநிலவுகிறது. சமீபத்தில் மிதுன் சக்ரவர்த்தியின் ஹோட்டலை சிலர் நோட்டமிட்டதாகவும் செய்திகள் வந்தன. இதனால் அச்சம் தெரிவித்து மிதுன் சக்ரவர்த்திமேற்கு வங்க முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள முதல்வர் புத்ததேவ், மிதுன் சக்ரவர்த்தி தொடர்ந்து தமிழகத்தில் தங்குவதாக இருந்தால் அவருக்கு மேற்கு வங்கஅரசு சார்பில் போதிய பாதுகாப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications