வீரப்பனுக்கு வக்காலத்து வாங்குவதா? பா.ஜ.க. ஆவேசம்
ஈரோடு:
மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்த வீரப்பனுக்கு நெடுமாறன் வக்காலத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது.தேவைப்பட்டால் வீரப்பனைப் பிடிக்க ராணுவத்தைக் கூட அனுப்பலாம் என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கிருபாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சி நீலகிரியில் "தாமரை ரத யாத்திரையைத் தொடங்கியது. இந்த ரத யாத்திரைகோவை வழியாக ஈரோட்டை அடைந்துள்ளது. இந்த ரதயாத்திரையில் பங்கேற்றிருக்கும் பா.ஜ. தலைவர்கிருபாநிதி, ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பக் கூடாது என நெடுமாறன் கூறியுள்ளார். இதையாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. வீரப்பனின் ஆள் கடத்தலால் இரு மாநில அரசுகளுமே நெருக்கடியைச்சந்தித்தன. இந்த மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை கூட உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களில் வீரப்பன் ஈடுபட்டுள்ளான். தனி மனிதநலனுக்காக மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்த வீரப்பனுக்கு வக்காலத்து வாங்குவது கண்டிக்கத்தக்க செயல்.
தனி மனிதனின் நலனுக்காக ஒட்டுமொத்த சமுதாயம் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வீரப்பனைப்பிடிக்க மத்திய அரசு உதவி செய்யக் காத்திருக்கிறது. இரு மாநிலங்களும் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மத்திய அரசு அதிரடிப்படை பிரிவையோ, ராணுவத்தையோ அனுப்ப வேண்டும். மீண்டும் இது போன்ற தவறுகள்ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
கொள்கை கோட்பாடுகளைச் சொல்வது மட்டும் பாரதீய ஜனதாவின் நோக்கம் அல்ல. பொதுமக்களின்அடிப்படைப் பிரச்னைகளையும் கவனிக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இது வரை ரத யாத்திரையின்போது 150 மனுக்களைப் பெற்றுள்ளோம். இந்த மனுக்கள் மீதான நடவடிக்கைக்காகஒரு கமிட்டி அமைத்துள்ளோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டளி மக்கள் கட்சி, தி.மு.க. வை விமர்சனம் செய்வதைதவிர்த்து விட்டு, குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்து நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு உள்ள பகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிடவுள்ளோம். எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவதுஎன்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
நாட்டின் நிலனைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரச் சீரழிவைத் தவிர்க்கவும், கடனற்ற நாடு என்பதைஉருவாக்கவும் மானியங்கள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களைப் பாதிக்கும் மண்ணெண்ணெய், காஸ் விலைகுறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் மத்தியில் வரவேற்பைப் பொற்றுள்ளது என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications