சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய புஷ் திட்டம்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் கையால் எண்ணப்பட்ட வாக்குகளையும், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று புளோரிடா சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய டெக்ஸாஸ் மாநில கவர்னரும், அதிபர் தேர்தலுக்கானகுடியரசுக் கட்சி வேட்பாளருமான ஜார்ஜ் டபிள்யூ புஷ் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய புஷ் முடிவு செய்துள்ளதாக சி.என்.என். தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தனதுவக்கீல்களுக்கும் புஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, புதன்கிழமை புளோரிடா சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், கையால் எண்ணப்பட்ட வாக்குகளை, மொத்த வாக்குகள் எண்ணிக்கையுடன் சேர்க்கஉத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. கையால் எண்ணப்பட்ட வாக்குகளை, மொத்த வாக்கு எண்ணிக்கையுடன் சேர்ககுமாறு, மாநில தேர்தல்அதிகாரி கேத்தரின் ஹாரிஸுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புளோரிடா சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் அல் கோரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தற்போது புஷ் 930 வாக்குகளே அதிகம்பெற்று முன்னணியில் உள்ளார். புளோரிடா மாநிலத்தின் மேலும் 3 கவுன்டிகளில் கையால் வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதில்அல்கோருக்கு சாதகமாக முடிவுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புளோரிடாவில் யார் வெற்றி பெறுகிறாரோ அவருக்கு 25 எலக்டோரல் வாக்குகள் கிடைக்கும். அவரே அடுத்த அமெரிக்க அதிபராகவும்தேர்வு செய்யப்படுவார்.
மியாமி டேடியில் மறு எண்ணிக்கை:
இதற்கிடையே, மியாமி டேடி கவுன்டியில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர் விரும்புவதாக அவரதுகட்சி பிரச்சார நிர்வாகி வில்லியம் டாலே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் மியாமி டேடியில் ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது எங்களுக்குமிகப்பெரிய தலைவலியாக உள்ளது.
புளோரிடா மாநில சட்டப்பட்டி, வாக்குகள் எண்ணப்பட்டதில் தவறு இருந்தால் உடனடியாக மறு எண்ணிக்கைக்கு உத்தர விட வேண்டும்.
மியாமி டேடியில் வாக்குகள் கையால் எண்ணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றார் வில்லியம் டாலே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications