"வீரப்பனுக்கு உதவியவர்களை அம்பலப்படுத்துவேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனுக்கு உதவிய அரசியல்வாதிகளை சதாசிவா கமிஷனிடம் அம்பலப்படுத்துவேன் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், ராஜ்குமாரை மீட்கச்சென்ற தூதருமான பழ.நெடுமாறன் புதன்கிழமை தெரிவித்தார்.

நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்தது தொடர்பாக பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோருக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பாராட்டுவிழா சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் புதன்கிழமை நடந்து.

பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, பழ.நெடுமாறன் பேசியதாவது:

ராஜ்குமார் மீட்கப்படாமல் இருந்தால் தமிழர்-கன்னடர் மோதல்கள் ஏற்பட்டிருக்கும். பல கோடி சொத்துக்கள் சேதப்பட்டிருக்கும். உயிர்ப்பலிகள்ஏற்பட்டிருக்கும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் பல தலைவர்கள் கண்டபடி பேசி வருகிறார்கள்.

யாருடைய விமர்சனமும் என்னை எதுவும் செய்து விட முடியாது. நான் பாசானத்தில் பூத்த புழு. விமர்சனங்களை உரமாகக் கொண்டு வளர்ந்தவன் நான். இரு மாநிலமக்களின் நலன் கருதி இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.

நான் விடுதலைப்புலிகளின் தூதராக காட்டுக்குச் சென்றேன் என்று சிலர் கூறுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்காக வீரப்பனுக்குத் தூது போக வேண்டாம்.தங்கள் மண்ணுக்காகப் போராடி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் ஒரு போதும் தமிழக அரசியலில் தலையிட்டது கிடையாது.

தமிழக சட்டசபையில், சோ.பாலகிருஷ்ணன் பேசுகையில் நெடுமாறன் ஒரு தேசத்துரோகி என்று பேசினார். அவராகப் பேசவில்லை. அவர் ஒரு அப்பாவி.யாரோ சொல்லிக் கொடுத்ததைப் பேசுகிறார். என்னைப் பற்றி அவதூதராகப் பேசி எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தி விட்டார்.

வீரப்பனுக்கு உதவினார்கள் என்று கூறி 121பேர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காகதமிழகத்திலுள்ள எந்த அரசியல்வாதிகளும் இதுநாள் வரை குரல் கொடுக்கவில்லை.

வீரப்பனைப் பிடிக்கச் சென்ற அதிரடிப்படையினர் 90 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். 60 பெண்களை மானபங்கப்படுத்தியுள்ளனர். 300 பேர்களுடைய கை,கால்களை முறித்துள்ளனர். அதிரடிப் படையினரின் இதுபோன்ற அட்டகாசங்களை யாராவது அம்பலப்படுத்தியுள்ளனரா?

வீரப்பன் யானைகளைக் கொன்றார், சந்தன மரங்களைக் கடத்தினார், என்று கூறுகிறார்கள். இது போன்ற செயல்களை ஒரு தனிமனிதனால் செய்யமுடியுமா? ஒரு பெரும் கூட்டம் இதைச் செய்துள்ளது. அதில் வீரப்பனும் ஒருவன். வீரப்பனுக்கு, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உதவியுள்ளனர்.

சதாசிவம் கமிஷன் விசாரணையின்போது அவர்கள் பெயர் பட்டியலை அம்பலப்படுத்துவேன். அந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம். வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பியிருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றார்நெடுமாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+