காஷ்மீர் சண்டை நிறுத்தத்திற்கு சிவசேனா எதிர்ப்பு
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தின்போது, மத்திய அரசு சண்டை நிறுத்தம்அறிவித்துள்ளதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக்கட்சியான சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சி சிவசேனா. ரம்ஜான் மாதத்தின்போது காஷ்மீரில் ராணுவநடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று சமீபத்தில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.இதற்குப் பலமாதிரியான கருத்துக்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில் சண்டை நிறுத்த அறிவிப்பு தேவையில்லாதது என்று சிவசேனா கட்சிகருத்துத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் நிருபம் கூறுகையில்,காஷ்மீரில் ஒரு தரப்பாக ஏன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்.இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாய் விளக்கம் அளிக்க வேண்டும்.
சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 2 நாட்கள் கூட முடியாத நிலையில், 5இந்தியர்களை காஷ்மீர் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். எனவே இதுபோன்றஅறிவிப்புகளால் என்ன பயன்?
கடந்த மார்ச் மாதம் அப்பாவி சீக்கியர்களைக் கொன்றபோது, பாகிஸ்தான்தீவிரவாதிகள் சிறிதாவது அவர்கள் குறித்து யோசித்துப் பார்த்திருப்பார்களா?
அப்பாவி மக்களை தீவிரவாதிகள் கொல்லும்போது ராணுவ அதிகாரிகளும்,வீரர்களும் என்ன செய்வார்கள் என்பதை அரசு விளக்குமா என்றார் நிருபம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications