பனிமூட்டம்: அதிரடிப்படை பணிகளில் தேக்கம்
ஈரோடு:
நீலகிரி மலைப் பகுதியில் தொடர் மழை மற்றும் பனிமூட்டம்காரணமாக அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையில்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வீரப்பன் அடிக்கடி வந்து போகும் பகுதியாக கருதப்படும்பந்திப்பூர், கொடநாடு உட்பட நீலகிரி மலைப் பகுதிகளில்அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தேடுதல்வேட்டை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால், பனிமூட்டம் உருவாகி, 5 அடிதூரத்திற்கு மேல் வெளிச்சம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
அடர்ந்த காட்டிற்குள் பனி நிலவுவதால், நீலகிரியில் உள்ளஅதிரடிப்படையினர் ஆங்காங்கே உள்ள முகாம்களில்தங்கியுள்ளனர்.
பனிமூட்டத்துடன், குளிரும் நிலவுகிறது. இது வீரப்பன்குழுவினருக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் வீரப்பன்குன்றுமலை என்ற பகுதியில் தங்கியிருக்கலாம் என்ற யூகம்எழுந்துள்ளது.
குன்றுமலைப் பகுதி செங்குத்தான மலைப் பகுதியாகும். அடர்ந்தகாடுகள் நிறைந்துள்ள இப்பகுதியில் பதுங்கு குழிகள் ஏரளமாகஉள்ளன. இவை வீரப்பனுக்கும் அவனது கூட்டாளிக்கும்புகலிடமாக விளங்கும்.
இப்பகுதியை நன்கு அறியாதவர்கள் யாரும் உள்ளே சென்றுதிரும்புவது இயலாத காரியமாகும். மேலும், விடுதலைப் புலிகள்பயிற்சி பெற்ற பகுதியாக இந்தப் பகுதி கருதப்படுகிறது.
எனவே, இப்பகுதியை சுற்றி வளைக்க அதிரடிப்படையினர்தயாராகி வருகின்றனர். இப்பணியை அதிரடிப்படைஆபரேஷனின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டி.ஐ.ஜி.தமிழ்ச் செல்வன், எஸ்.பி.க்கள் சைலேந்திரபாபு, அசோக்குமார்தாஸ், பெரியய்யா ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
வீரப்பனின் தேடுதல் வேட்டையில் இதுவரை 16 பிரிவாகஅதிரடிப்படைகள் செயல்படத் தாடங்கியுள்ளன. அடர்ந்தகாடுகளில் நவீன ஆயுதங்களுடன் முழு மூச்சுடன் களம்இறங்கியுள்ளனர் அதிரடிப்படை வீரர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications