திருவண்ணாமலை கோவிலில் ஏப்ரலில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஏப்ரல் மாதம் 11 ம் தேதி நடைபெறுகிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இந்தக் கோவிலில் 1976 ம் வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகுகும்பாபிஷேகம் நடை பெறவில்லை.
எனவே, அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஆன்மீகவாதிகளும், பொதுமக்களும் கோரி வந்தனர். அதன் பிறகுஅருணாசலேசுவரர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் திருப்பணி கமிட்டி ஒன்று கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இதில் சுமார் ரூ 2 கோடி செலவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 217 அடி உயர ராஜகோபுரம், வள்ளால மகாராஜ கோபுரம், கிளிகோபுரம், பழனி ஆண்டவர் சன்னதி, பாதாள லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் வளாகத்தில் உள்ள இதர பகுதிகளின் திருப்பணி வேலைகள் தொடங்கியது.
இதில் ராஜகோபுர திருப்பணி இளையராஜா சார்பில் செய்யப்படுகிறது. மேலும், 80 சதவீத திருப்பணிகளை நன்கொடையாளர்கள் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பணிகளை விரைவாக முடிப்பதற்காக இளையராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கும்பாபிஷேகத் திருப்பணிகள் பெருமளவு முடிந்து விட்டது. இன்னும் 20 சதவீத பணியை கோவில் நிதியிலிருந்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 11 ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும். இதுகுறித்து அரசுக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டு விட்டது. மேலும் கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக, திருவண்ணாமலையில் 16 கால் மண்டபம் கட்டும் பணியும் நிறைவு பெற்று விடும்.கோவில் முன்பு புதிய கொடிமரம் நடப்படும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications