அப்துல் கலாமுக்கு மதுரை பல்கலை. டாக்டர் பட்டம்
மதுரை:
விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை கவர்னர் பாத்திமா பீவி மதுரையில் வியாழக்கிழமை வழங்கினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின 34 வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடந்தது. விழாவுக்கு கவர்னர் பாத்திமா பீவி தலைமைதாங்கினார்.
விழாவில், இந்திய முதன்மை அறிவியல் ஆலோசகரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தைகவர்னர் பாத்திமா பீவி வழங்கினார்.
மேலும் பல்வேறு துறைகளில் படித்த மாணவ- மாணவிகள் 36 ஆயிரத்து 638 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் ஒரிசா மாநில கவர்னர் எம்.எம்.ராஜேந்திரன் பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ் புலவர்கள் மதுரை நகரில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிஅமைக்கப்பட்டுள்ள தெருக்கள் நகர அமைப்புக்கு உதாரணமாக விளங்குகின்றன.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த படிக்க முடியாத நிலையில் வளர்ந்த காமராஜர் கடின உழைப்பு, தியாகம், பொதுஅறிவு ஆகியவற்றால் பெரிய அளவுக்குபுகழை சம்பாதிக்க முடிந்தது.
அதே போன்று, நல்ல சமுதாயவாதிகளாக, சிறந்த நிர்வாகிகளாக இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் உருவாக வேண்டும்.
35 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பல்கலைக்கழகம் தென் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக விளங்குகிறது.
இது ஒரு நாள் இரவில் வந்தது அல்ல. சிறந்த உறுப்பினர்கள் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள், நிர்வாக அலுவலர்களால்தான் இந்த நிலையை அடைய முடிந்தது.
கல்வி என்பது ஒரு தொடர் பயிற்சி. இதுவரை நீங்கள் கற்ற கல்வி கற்பதற்காக உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொண்டதுதான். கல்வி கற்க பலவழிகளை ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும்.
ஒரு குழுவுக்கு தலைமை ஏற்பது என்பது சர்வாதிகாரத்துடன் செயல்படுவதற்காக அல்ல. எல்லோரையும் அரவணைத்துச் செல்வதற்காகத்தான்.எதிலும் கவனமாகவும், பண்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
சிறந்த தலைவர்களான சர்ச்சில், காந்தி, நேரு, காமராஜர், அண்ணா போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications