இஸ்ரேலிடமிருந்து கண்காணிப்பு விமானங்கள் வாங்குகிறது இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் உள்பட தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உளவு பார்க்கஆளில்லாமல் பறக்கும் கண்காணிப்பு விமானங்கள் வாங்க இஸ்ரேலுடன், இந்தியா வெள்ளிக்கிழமை ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளது.

ராணுவ அமைச்சகம் இதுகுறித்துக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியா, இஸ்ரேல் விமானத் தொழிற்சாலையிலிருந்து (ஐ.ஏ.ஐ.)விமானங்கள் வாங்க ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.

தற்போது இந்திய ராணுவப் படை மற்றும் விமானப் படை ஆகிய இரண்டுக்கும் பயன்படும் வகையில் இஸ்ரேல்விமானத் தொழிற்சாலையிடமிருந்து ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

இதுபோன்ற விமானங்கள் வாங்குவதால் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதிமற்றும் பிற பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.

இதனால் ராணுவப் படை மற்றும் விமானப் படை அதிகாரிகளுக்கு நல்ல பயன் கிடைக்கும். கிராமப் பகுதிகளில்மறைந்திருக்கும் குற்றவாளிகளைக் கண்டறியவும் இந்தக் கண்காணிப்பு விமானங்கள் மிகவும் உதவிகரமாகஇருக்கும்.

இஸ்ரேலிடமிருந்து, இந்தியா வாங்கும் சர்ச்சர் மார்க்-2 என்ற இந்த ஆளில்லாத கண்காணிப்பு விமானம் 15, 000அடி உயரத்தில் பறக்கும் ஆற்றல் படைத்தது. தொலை தூரத்திலிருந்து கீழே என்ன நடக்கிறது எனபதை இந்தவிமானத்தால் எளிதில் கண்டறிய முடியும்.

இஸ்ரேல் விமானத் தொழிற்சாலையினர் இதுவரை ராணுவம் மற்றும் பொதுமக்களின் பயனுக்காக பல ரகங்களில்கண்காணிப்பு விமானங்களைத் தயாரித்துக் கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

இந்திய விமானப்படை வீரர்கள் பலருக்கு தற்போது, இஸ்ரேலைச் சேர்ந்த கைதேர்ந்த நிபுணர்களால் ஆளில்லாதவிமானத்தை எப்படி இயக்குவது என்ற பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்காக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆளில்லாத கண்காணிப்புவிமானங்களை குறிப்பாக காஷ்மீர் பகுதியில் உபயோகித்து வருகிறார்கள் என்று ராணுவ செய்திக் குறிப்புதெரிவிக்கிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+