மகளைக் கொன்ற சீக்கிய மதத் தலைவியிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை
டெல்லி:
மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சீக்கிய மத அமைப்பின் தலைவியை சி.பி.ஐ. இன்று மீண்டும் விசாரிக்க உள்ளது.
பஞ்சாபின் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவியாக இருப்பவர் பீபி ஜகீர் கவுர். இவரது மகள் ஹர்பிரீத் கவுர்கடந்த ஏப்ரல் 20ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில் அது கொலை எனத் தெரியவந்தது.
கமல்ஜீத் என்பவரை ஹர்பிரீத் (வயது 19) காதலித்து வந்தார். இந்தக் காதலுக்கு தாயார் ஜகீர் கவுர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.ஆனால், அவரை மீறி ஹர்பிரீத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கர்ப்பமாக இருந்த அவர் தனது தாயின் நண்பர் ஒருவரின்வீட்டுக்கு வந்திருந்தார்.
அங்கு இரவில் தங்கியிருந்தபோது தான் அங்கு தான் அவர் கொலை செய்யப்பட்டார். 30 பீனோ பார்பிடால் விஷ மாத்திரைகள்பொடி செய்யப்பட்டு அவரது உணவில் கலக்கப்பட்டிருந்தது. அந்த விஷ உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஹர்பிரீத் உயிர்பிரிந்தது.
காதல் திருமணம் செய்து கொண்டதால் தனது மகளை தாயாரே 6 கூட்டாளிகள் உதவியுடன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஜகீர் கவுரிடம் சி.பி.ஐ. முதலில் ஒருமுறை விசாரித்தது. விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்.இதையடுத்து அவரை சி.பி.ஐ. வெள்ளிக்கிழமை விசாரணை செய்ய உள்ளது.
ஜகீர் கவுர் தான் கொலையாளி என சி.பி.ஐ. ஏற்கனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications