கள்ளக் காதலர்களின் லொள்ளு...
சென்னை:
காதலித்துக் கைபிடித்த கணவரை காணவில்லை என்று ஒரு பெண்ணும், ஊனமுற்ற தன் மனைவியைக் காணவில்லை என்று ஒருவாலிபரும் போலீசில் புகார் செய்தனர். இரண்டு புகார்களையும் விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் விட்டனர்.
ஏன், எதற்காக என்பதை அறிய மீதிக் கதையையும் படியுங்கள்....
ஆவடி சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டொமினிக் (30). டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்துவந்தார். மனோன்மணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர். இவர்களுக்கு கிளிண்டன், தாமஸ் என்றஇரு மகன்கள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமாக டிராவல்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று டொமினிக் விரும்பினார். கணவரின் விருப்பத்தைநிறைவேற்ற தனக்கு சொந்தமான நிலத்தையும், நகைகளையும் விற்று ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார் மனோன்மணி.
பணத்தை பெற்றுக் கொண்டு கார் வாங்கி வருகிறேன் என்று கிளம்பிய கணவர் டொமினிக் மாயமாகி விட்டார். பல இடங்களில்அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையுடன் ஆவடி காவல் நிலையத்தில் மனோன்மணி புகார் செய்தார்.காணாமல் போன கணவரை தேடி கண்டுபிடித்து தாருங்கள் என்று முறையிட்டார்.
அதே நாளில் ஆவடியை சேர்ந்த கூலித் தொழிலாளி சவுந்திரராஜன் என்பவரும் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.தன்னுடைய மனைவி கவிமாலாவை காணவில்லை என்றும் அவரை தேடி கண்டுபிடியுங்கள் என்றும் அதில் கூறியுருந்தார்.
கவிமாலா ஊனற்றவர். எஸ்.டி.டி. பூத் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவரது வருமானத்தில் தான் குடும்பமே நடந்தது.இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இரண்டு புகார் மனுக்களையும் தனித் தனி கோணத்தில் ஆரம்பத்தில் விசாரித்த போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்தன.அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது இரண்டு புகார்களும் ஒன்றே என்பதை உறுதிபடுத்தினர்.
காணாமல் போன இரண்டு பேரும் கள்ளக் காதலர்கள் என்பதை கண்டுபிடித்தனர். இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள்என்றாலும், அதை உதறித் தள்ளிவிட்டு புது வாழ்க்கை நடத்துவதற்காக போட்ட திட்டப்படி தலைமறைவாகி விட்டனர் என்பதுதெரிந்தது.
கணவரின் காதல் லீலை பற்றி தெரியாமல் மனைவியும், மனைவியின் காதல் வேலை பற்றி தெரியாமல் கணவரும் போலீசில்உண்மையான பாசத்தில் புகார் கொடுத்தனர் என்பது தான் இதில் வேதனை.
இப்போது இந்த நவீன கள்ளக் காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications