மீண்டும் விமான சேவையை துவங்குகிறது மோடிலுப்ட்
மும்பை:
நீண்டகாலமாக செயல்படாமல் இருந்து வந்த மோடிலுப்ட் விமான நிறுவனம், மீண்டும்ராயல் ஏர்வேஸ் லிமிடெட் என்ற பெயரில் சேவையை துவக்க உள்ளது.
மோடிலுப்ட் விமான நிறுவனம் சில காலமாக விமான சேவையை நிறுத்திவைத்திருந்தது. இந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ராயல் ஏர்வேஸ்லிமிடெட் என்ற பெயரில் மீண்டும் விமான சேவையை துவக்கவிருக்கிறது.
ராயல் ஏர்வேஸ் என்ற பெயர் மோடிலுப்ட் மீண்டும் விமான சேவையை துவங்க பணஉத வி செய்யவிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ராயல் ஹோல்டிங் சர்விசஸ்லிமிடெட் என்ற கம்பெனியின் பெயரை அடிப்படையாகக் கொண்டது.
மோடிலுப்ட் நிறுவனம் தனது விமான சேவையை மீண்டும் துவக்க ரூ 100 கோடிஅளவுக்கு முதலீடு செய்யவிருக்கிறது. இதில் ராயல் ஹோல்டிங் நிறுவனம் ரூ 85 கோடிகொடுக்கிறது.. புதிய மூலதனமான ரூ 100 கோடி மோடிலிப்டின் மூலதனத்தை ரூ 150கோடியிலிருந்து ரூ 250 கோடிக்கு உயர்த்தும்.
இந்த நிறுவனம் செயல்படுவதற்கு அயல்நாட்டு முதலீடு வளர்ச்சி வாரியம் மற்றும்பங்குகள் பாதுகாப்பு வாரியமான செபி மற்றும் பங்குதாரர்களின் ஒப்புதலும்பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
