தடா கைதிகளை சந்திக்கிறார் நெடுமாறன்
பெங்களூர்:
தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், ராஜ்குமாரை மீட்டு வந்த தூதருமான பழ.நெடுமாறன் சனிக்கிழமை பெங்களூர் வருகிறார். அவர் மைசூர் சிறையில்இருக்கும் தடா கைதிகளை சந்தித்துப் பேசுகிறார்.
இது குறித்து கர்நாடக தமிழர் பேரவை தலைவரும், நடிகர் ராஜ்குமார் மீட்பு முயற்சியில் பங்கு கொண்டவருமான சண்முக சுந்தரம் கூறியதாவது:
வீரப்பனை பிடிக்க ஈடுபட்ட அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு கொளத்தூர் கலை மகள் திருமண மண்டபத்தில் 26ம் தேதி நடக்கிறது.
இதில் முன்னாள் நீதிபதி கிருஷ்ணா, தலித் அமைப்புப் பிரதிநிதி கோபிநாத், மன்சூர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் நானும் கலந்துகொள்கிறேன்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் சனிக்கிழமை மைசூர் வருகிறார். அவர் தடா கைதிகளை சந்தித்துப் பேசுகிறார். அதன்பின் தடாகைதிகளுக்காக வாதாடும் வக்கீல் வேணுகோபால் உள்பட பலரை சந்தித்துப் பேசுகிறார். அவர், தடா கைதிகளை ஜாமீனில் விடுவிப்பது குறித்தும்ஆலோசனை நடத்துகிறார் என்றார் சண்முகசுந்தரம்.












Click it and Unblock the Notifications