ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வரும் டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் ஆகும். இதை பல இஸ்லாமிய அமைப்புகள் கருப்புதினமாக ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் மாதம் 6 ம் தேதி ரயில் நிலையங்களில் குண்டு வெடித்தது. மேலும் பலஇடங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்தன.
இதைத்தொடர்ந்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த ஐ.ஜி. திலகவதி உத்தரவிட்டார். அதன்படி,அனைத்து ரயில் நிலையங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் ரகசிய வீடியோ காமிராக்களைப்பயன்படுத்தி போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைபோலீஸார் துப்பாக்கி ஏந்தியபடி ரயில் நிலையத்தில் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவை தவிர ரயில்வே பாதுகாப்பு படை சிறப்புப் பிரிவு போலீஸார் மோப்ப நாய்களுடன் வலம் வருகிறார்கள்.சந்தேகப்படும் நபர்களிடம் சோதனை செய்யப்படுகிறது.
பயணிகள் தவிர பிற யாரும் ரயில் நிலையங்களில் நுழைய முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications