வாஜ்பாய் கொடும்பாவியை எரித்த சிவசேனா
டெல்லி:
ரம்ஜானையொட்டி காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளதை பிரதமர் வாஜ்பாய் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கூறி, சிவசேனைக்கட்சியினர் நாடாளுமன்றம் அருகே வாஜ்பாயின் கொடும்பாவியை எரித்தனர்.
கொடும்பாவி எரிப்புச் சம்பவம், தலைநகர் டெல்லியிலுள்ள நாடாளுமன்றம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்தது.
சிவசேனைக் கட்சி டெல்லி பிரிவு தலைவர் ஜெய்பகவான் கோயல் தலைமையில் கட்சித் தொண்டர்கள் டெல்லியிலுள்ள ஜந்தார் மந்தார் பகுதியிலிருந்து,நாடாளுமன்ற வளாகம் நோக்கி, வாஜ்பாய்க்கு எதிராகவும், சிவசேனைக் கட்சித் தலைவர் பால்தாக்கரேவுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பிக்கொண்டே வந்தனர். பின்னர் அவர்கள், நாடாளுமன்ற வளாகம் அருகே வாஜ்பாயின் கொடும்பாவியை எரித்தனர்.
ஆதரவு வாபஸ்:
முன்னதாக, கோயல் கூறுகையில், சிவசேனைக் கட்சித் தலைவர், பால்தாக்கரே பாரதிய ஜனதாக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, சிவசேனாவின் 15 எம்.பி.க்களின் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், கடந்த வருடம் லாகூருக்கு பஸ் போக்குவரத்து ஏற்படுத்தி, கார்கில் போருக்கு வழி வகுத்தார் வாஜ்பாய். அதேபோல் இந்த வருடம்ரம்ஜான் மாதத்தையொட்டி, காஷ்மீரில் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையொட்டி ஐந்து லாரி டிரைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்என்றார்.
வெளிநடப்பு:
முன்னதாக, காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சிவசேனை எம்.பி.க்கள் போர்க்கொடிஉயர்த்தினர். வாஜ்பாய் இதை நிராகரித்து விட்டதால் அவர்கள் வெளிநடப்புச் செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications