4 பேர் படுகொலை: உ.பி.யில் தொடர்ந்து பதட்டம்
லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் வாரனாசியை அடுத்துள்ள மாப்பூர் கிராமத்தில் 4 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு தொடர்ந்துபதட்டம் நிலவுகிறது. இருப்பினும், இங்கு வியாழக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக முடிந்தது.
இதுகுறித்து மாநில முதன்மை உள்துறை செயலாளர் ஹேமந்திரா குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
மாப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கடந்த நவம்பர் 9ம் தேதி முஸ்லீம் சிறுவர் சாஹிரூதின் என்பவர் தாக்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில்கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரம் பரவாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். மாப்பூர் மண்டல அதிகாரி கைலாஷ் நாத் சிங், அப்பகுதிக்குச் சென்றுநிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
கைலாஷ் நாத் சிங் திரும்பி வரும் வழியில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர் மேல் வெடிகுண்டு வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயேஇறந்தார். மேலும், அந்தப் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த 3 முஸ்லீம் இளைஞர்களை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது.அவர்கள் வந்த காரும் தீவைத்து எரிக்கப்பட்டது. இறந்த 3 பேரின் சடலங்களும் பக்கத்திலுள்ள ஆற்றில் வீசப்பட்டது. இதையடுத்து மாப்பூர்கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய புறக்காவல் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம்தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற குற்றவாளிகளைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்றார்.
உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வராக ராஜ் நாத் சிங் பதவியேற்றுக் கொண்டபின் நடக்கும் 3 வது வகுப்புக் கலவரமாகும் இது.
அசாமகார் மாவட்டம் முபாரக்பூர் டவுனில் கடந்த நவம்பர் 5 ம் தேதி ஷியா, சன்னி முஸ்லீம் இனத்தவரிடையே கலவரம் ஏற்பட்டது. இதையடுத்துஅப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அது அமலில் உள்ளது. கடந்த வாரம் கான்பூரில் சிறுவன் கொலை செய்யப்பட்டான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications