மகளை கொன்ற சீக்கியத் தலைவியிடம் சிபிஐ 3 மணி நேரம் விசாரணை
டெல்லி:
காதல் திருமணம் செய்ததற்காக மகளைக் கொன்ற தாயும், பஞ்சாப் மாநில சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவியுமான ஜகீர் கவுரிடம்வெள்ளிக்கிழமை சிபிஐ 3 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியது.
விசாரணை குறித்து ஜகீர் கவுர் கூறுகையில், சிபிஐயினர் என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கட்டும். நான் எதற்கும் பதில் கூறத் தயாராகஇருக்கிறேன். எதிர்காலத்திலும் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பலாம். நான் பதிலளிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.
ஏற்கனவே, இவரை கடந்த நவம்பர் 17 ம் தேதி, சிபிஐ புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 19 வயதான இவரது மகள் ஹர்பிரீத், கமல்ஜித் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு ஜகீர் கடும் எதிர்ப்புத்தெரிவித்தார்.
தாயின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹர்பிரீத், தான் காதலித்த வாலிபர் கமல்ஜித்தையே திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஹர்பிரீத் கர்ப்பமாக இருந்தபோது, அவரது தாய் ஜகீர் அவர் வீட்டுக்குச் சென்றார். அடுத்த நாள் (ஏப்ரல் 20 ம் தேதி) ஹர்பிரீத் விஷ மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில் இறந்துகிடந்தார்.
அவரை யார்? எதற்காக? கொலை செய்தனர் என்பது மர்மமாக இருந்தது. மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜகீரே அடியாட்கள் வைத்து தன்மகளைக் கொலை செய்திருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் ஜகீர் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications