போதும், மாமிச உணவு
மும்பை:
அமெரிக்கா, இங்கிலாந்தில் மாட்டு இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும் நிலையில், இந்தியாவில்மாட்டிறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விலங்குகளை மதிக்கும் மனிதர்கள் என்ற அமைப்பு இந்தியாவில் மிருகங்கைள வதை செய்வதை எதிர்த்து இயக்கம்ஆரம்பித்துள்ளது. இந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதி ஜேசன் பேக்கர் கூறுகையில், இந்தியாவில் ஆடு, மாடு, கோழி, பசுக்கள்,எருமைகள் ஆகியவை துன்புறுத்தப்படுகின்றன. அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும்போதுகொஞ்சம் கூட ஈவு இரக்கம் காட்டுவதில்லை.
அதே போல அவை கொல்லப்படுவதும் கூட கர்ண கொடூரமான முறையில் தான் நடக்கிறது. இந்தியா தனது பாரம்பரியஉணவான சைவத்துக்கு மாற வேண்டும். பிரிட்டனில் இறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அங்கு 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 50 சதவீதம் பேர் சைவத்துக்கு மாறிவிட்டனர். பிரிட்டனில் சைவ உணவுவிடுதிகளுக்கு தனி மவுசே வந்துவிட்டது. அதே போல அமெரிக்காவில் ரெட் புட் டெய்லி, நியூஸ்ரூம் கபே ஆகிய சைவ உணவுவிடுதிகளில் தான் லாஸ்ஏன்ஜெல்சின் ஹாலிவுட் நடிகை, நடிகையர்கள் குவிகின்றனர்.
ஏன் இந்தியாவில் கூட நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஹேமமாலினி, பண்டிட் ரவி சங்கர், கிரிக்கெட் வீரர் அமில் கும்ப்ளே,மாடல்ஜான் ஆப்ரஹாம், நடிகை ஜூகி சாவ்லா, மகிமா செளத்ரி ஆகியோரும் சைவம் உண்பவர்கள் தான்.
உடல் நலனில் அக்கரை இருப்பவர்கள் மாமிசம் உண்பதை உடனே நிறுத்த வேண்டும்.
மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்லாமல், உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு மாமிசம் உண்பதை நிறுத்த வேண்டும்.கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சியால் தான் மாரடைப்பு, இருதய பாதிப்புகள், கேன்சர் ஆகியவை ஏற்படுகின்றன என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications